தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

கலவையான விமர்சனங்கள் எதிரொலி: 'கங்குவா' இரண்டாவது நாள் வசூல் பெரும் வீழ்ச்சி! - KANGUVA COLLECTIONS

Kanguva collections: சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக வெளியாகியுள்ள ’கங்குவா’ திரைப்படம் இரண்டாவது நாளில் இந்திய அளவில் 9 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கங்குவா போஸ்டர்
கங்குவா போஸ்டர் (Credits - @StudioGreen2 X account)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 16, 2024, 11:07 AM IST

சென்னை: கங்குவா திரைப்படம் இரண்டாவது நாள் வசூல் பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள கங்குவா திரைப்படம் இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி வெளியானது.

சூர்யா திரை வாழ்வில் அதிக பொருட்செலவில் தயாரான கங்குவா திரைப்படம் பிரமாண்டமான முறையில் உலகம் முழுவதும் கிட்டதட்ட 11,500 காட்சிகள் வெளியானது. சினிமா வர்த்தக இணையதளம் சாக்னில்க் வெளியிட்டுள்ள தகவலின்படி இந்திய அளவில் கங்குவா திரைப்படம் முதல் நாளில் 24 கோடி வசூல் பெற்றது. நேற்று இரண்டாவது நாளில் இந்திய அளவில் வெறும் 9 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.

மொத்தமாக சேர்த்து இந்திய அளவில் இரண்டு நாட்களில் 33 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. கங்குவா படத்தை வெளியான இரண்டாவது நாளில் தமிழ்நாட்டில் 16.27 சதவிதம் பேர் பார்த்துள்ளனர். முதல் நாளில் உலக அளவில் 58.62 கோடி வசூல் செய்துள்ளதாக கங்குவா படக்குழு அறிவித்துள்ளது. இதனிடையே கங்குவா திரைப்படத்திற்கு வசூல் குறைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ரஜினியின் 'தளபதி' திரைப்படம் ரீ ரிலீஸ்.. எப்போ தெரியுமா?

கங்குவா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், படத்தில் சூர்யாவின் நடிப்பு, கலை இயக்கம், கிராஃபிக்ஸ் காட்சிகள் பாராட்டை பெற்று வருகிறது. மறுபக்கம் அமரன் திரைப்படமும் நன்றாக ஓடி வருவதால் கங்குவா திரைப்படத்தின் வசூல் குறைந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது. முன்னதாக கங்குவா படத்தின் தயாரிப்பாளர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா கங்குவா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 2000 கோடி வசூல் செய்யும் என ப்ரமோஷன்களில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details