தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

விநாயகர் சதுர்த்தி: பொதுமக்களுக்கு நடிகர் சங்கம் அன்னதானம்! - vinayagar chaturthi celebrations - VINAYAGAR CHATURTHI CELEBRATIONS

Vinayagar chaturthi celebrations: தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி, விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது

விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய தென்னிந்திய நடிகர் சங்கம்
விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய தென்னிந்திய நடிகர் சங்கம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 7, 2024, 3:01 PM IST

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் அனைத்து பண்டிகைகளும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக, தியாகராயர் நகரில் கட்டப்பட்டு வரும் நடிகர் சங்க வளாகத்தில் அமைந்துள்ள விநாயர் கோயிலில் சிறப்பு பூஜை செய்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர்.

பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் புதிய நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் உள்ள வித்யா கணபதி கோயிலில் அமைந்துள்ள விநாயகப் பெருமானுக்கு காலை சிறப்பு வழிபாடு செய்தனர். இதில் நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பூச்சி முருகன், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக அன்னதானமும் வழங்கப்பட்டது.

மேலும் தமிழ் நாடக உலகின் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் 157வது பிறந்த நாளில் அவரது திருவுருவ படத்திற்கு, கார்த்தி, பூச்சி முருகன் உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில் நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நாளை (செப் 8) சென்னையில் நடைபெற உள்ளது. கேரளாவில் நடிகைகள் மீதான பாலியல் புகார் எதிரொலித்துள்ள இந்த நேரத்தில் தமிழ் சினிமாவிலும் ஹேமா கமிட்டி தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்நிலையில் நாளை நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கூடுகிறது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: நவ.1 முதல் அனைத்து படப்பிடிப்பும் ரத்து.... நடிகர் சங்கம் vs தயாரிப்பாளர் சங்கம்! - South Indian actors association

ABOUT THE AUTHOR

...view details