தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ரஜினி - சீமான் திடீர் சந்திப்பு! உறுதிசெய்த சாட்டை துரைமுருகன் - RAJINI SEEMAN MEET

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் ரஜினிகாந்தை இன்று சந்தித்தாக தகவல் வெளியாகி உள்ளது. இச்சந்திப்பு தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ரஜினி - சீமான் சந்திப்பு
ரஜினி - சீமான் சந்திப்பு (Credits - Saattai duraimurugan X Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 21, 2024, 11:02 PM IST

சென்னை: நாம் தமிழர் கட்சியின் (NTK) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் ரஜினிகாந்தை இன்று சந்தித்தாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரின் இச்சந்திப்பு தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் கடந்த 8 ஆம் தேதி (நவம்பர் 8) தமது பிறந்த நாளை கொண்டாடினார். இந்நாளையொட்டி அவர், தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெறவுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், சீமான் இன்று ரஜினிகாந்தை திடீரென சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்தில் இருவரும் சந்தித்து கொண்டதாகவும் தெரிகிறது.

சீமான் - ரஜினி சந்திப்பு குறித்து ரஜினி தரப்பில் எந்த அதிகாரபூர்வ தகவலும் இதுவரை வெளியிடப்படாத நிலையில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன், தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் இன்றிரவு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்" சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த அண்ணன் சீமான்!" என்ற கேப்ஷனுடன் சீமானின் தோள் மீது ரஜினி கைப்போட்டு நிற்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details