சென்னை: சல்மான் கான், அட்லீ திரைப்படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குநர் அட்லீ தமிழ் சினிமாவில் 'ராஜா ராணி' என்ற ரொமான்டிக் திரைப்படம் மூலம் அறிமுகமானார். பின்னர் அட்லீ விஜய்யை வைத்து தெறி, மெர்சலி, பிகில் ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக உருவெடுத்தார்.
இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அட்லீ, குறுகிய காலத்தில் பாபெரும் இயக்குநரானார். இதனைத்தொடர்ந்து பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து 'ஜவான்' திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் 1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் ஷாருக்கானுக்கு பிடித்த இயக்குநர் வரிசையில் இடம்பிடித்தார்.
இந்நிலையில் அடுத்ததாக மற்றொரு பாலிவுட் உச்ச நடிகர் சல்மான் கானை வைத்து இயக்கவுள்ளார். இத்திரைப்படம் ராஜமௌலி இயக்கிய மகதீரா போன்று பிரியட் டிராமாவாக உருவாகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் முன்னதாக கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு பதிலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.