சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அருணாச்சல பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்கள் உருவான தின விழா நேற்று (பிப்.19) நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, இரு மாநில பிரதிநிதிகள் உள்ளிட்ட விருந்தினர்கள் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, “காலனிய ஆட்சியில் மாநிலங்கள் என்பது இல்லை. மக்கள் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு நகரும் போது போக்குவரத்து வசதி கூட பெரிதும் இருந்தது இல்லை. இது ஒரு பரந்த நாடு, பன்முகத்தன்மை கொண்டது. மாநிலங்கள் உருவான தின விழா ஆளுநர் மாளிகையில் நடக்க வேண்டிய நிகழ்வு அல்ல. கல்லூரிகள், பொது இடங்களில் நடந்திருக்க வேண்டியது. அப்போது தான் இரு மாநில கலாச்சாரமும் ஒருங்கிணைந்து அனைவராலும் அறியப்படும்.
அருணாசலப் பிரதேசம் மற்றும் மிசோரம் மாநில நண்பர்கள் தமிழ்நாட்டில் தங்கி வேலை செய்தும், கல்லூரியில் பயின்றும் வருகிறார்கள். இந்நிலையில், என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், வெளி மாநிலத்தவர்கள் தமிழ் மொழியை கற்றுக் கொள்ளுங்கள். தமிழ் நண்பர்களை மற்ற மாநில நண்பர்கள் அவர்களது வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம், பரஸ்பர பந்தத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
தமிழ் மொழி தெரிந்தால், இந்த மாநிலத்தைச் சுற்றி உள்ள பல தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். எனக்கும் கூட தமிழ் செய்தித்தாள்களைப் படிக்க முடியும், யாராவது தமிழில் பேசினால் புரிந்து கொள்ள முடியும். அந்த பந்தம் எப்போதும் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டது. நான் கேரளாவில் பணியாற்றும் போது மலையாளம் கற்றுக் கொண்டேன்.
At the statehood day celebrations of Arunachal Pradesh and Mizoram at Raj Bhavan, Governor Ravi highlighted how, under the visionary leadership of Hon'ble PM Thiru @narendramodi, initiatives like Statehood Day celebrations—along with a decade of transformative development,… pic.twitter.com/b1jb7AHN5P
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) February 19, 2025
எனக்கும், எனது மனைவிக்கும் சவுகரியமாக இருந்தது. எனக்கும் கூட பல மாநிலங்களில் நண்பர்கள் உள்ளனர். ஒரு காலத்தில் கொல்கத்தா விமானநிலையத்தில், ஒரு விமானத்திற்காக நாள் முழுவதும் காத்திருப்பேன். ஆனால், இன்று வடகிழக்கு மாநிலங்கள் உட்பட ஏராளமான விமான நிலையங்கள், பெரும்பாலான இடங்களில் ரயில் சேவைகள் என அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டுவிட்டன.
நம் நாட்டின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு மாநிலங்களுக்கு இடையேயான மக்களின் பந்தம் சார்ந்தே இருக்கிறது. இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் ஒருங்கிணைக்கப்பட்ட போக்குவரத்து சேவை மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. வட கிழக்குப் பகுதிகள் நம் நாட்டின் எதிர்காலம் என்று சொல்லலாம்.
இதையும் படிங்க: "மத்திய அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது" - உதயநிதி ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு!
அங்கு மனித வளமும் சிறப்பாக உள்ளது. இயற்கை வளங்களும் சிறப்பாக உள்ளன. மணிப்பூர், நாகாலாந்து பகுதியைச் சேர்ந்த என் நண்பர்கள் என்னை வந்து பார்த்துவிட்டு, ஒரு நாளில் கூட திரும்பிச் செல்ல முடிகிறது. எந்த சவால்களும் இல்லை போக்குவரத்து சிறப்பாக உள்ளது. அனைத்தும் மேம்பட்டு வருகிறது. சிறிய மாநிலங்கள் என்ற எண்ணத்தில் இருந்து வெளியே வாருங்கள்” எனத் தெரிவித்தார்.