சென்னை: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான கமல்ஹாசன் தாயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் தான் ’அமரன்’. இப்படம் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் குமார் இசையில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. முக்கியமாக சாய் பல்லவியின் நடிப்பு அனைவராலும் கொண்டாடப்பட்டது.
தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை வைத்து பயோபிக்காக உருவாக்கப்பட்டிருந்தது ’அமரன்’ திரைப்படம். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்றது. ‘அமரன்’ தொடர்ச்சியாக 100 நாட்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதன் 100வது நாள் விழாவானது சமீபத்தில் படக்குழுவினர், படத்தின் விநியோகஸ்தர்கள், மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோருடன் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.
அமரன் படத்தில் கல்லூரி, இராணுவக் கல்லூரி, இராணுவ வீரன், மேஜர் என பல்வேறு தோற்றங்களில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இவையெல்லாம் வெவ்வேறு வயதுடைய தோற்றங்கள் எனவே இதற்காக கடுமையாக உடற்பயிற்சி மேற்கொண்டு தனது உடல் தோற்றத்தை மாற்றியிருந்தார் சிவகார்த்திகேயன்.
அனைவரும் இதற்காக சிவகார்த்திகேயனை பாரட்டியிருந்தார்கள். ’அமரன்’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே சிவகார்த்திகேயனின் உடற்பயிற்சி குறித்த வீடியோ வெளி வந்திருந்தது. தற்போது அமரன் படத்திற்காக சிவகார்த்திகேயன் மேற்கொண்ட உடற்பயிற்சி முறையை பற்றிய முழுநீள வீடியோ வெளியாகியுள்ளது.
9 நிமிடங்கள் இருக்கும் இந்த வீடியோவில் சிவகார்த்திகேயன் அமரன் கதாபாத்திரத்திற்காக உடற்பயிற்சியில் உடலை வருத்திக் கொண்டதை அவரது பயிற்சியாளர் சந்தீப் தெரிவிக்கிறார். அவரது உணவுமுறை, உடற்பயிற்சி முறை என பலவற்றை விளக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அமரன் வெற்றி விழாவில் நடிகர் கமல்ஹாசனும் சிவகார்த்திகேயனின் உடல் தோற்றத்தை புகழ்ந்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விரைவில் ’சுந்தரா டிராவல்ஸ்’ இரண்டாம் பாகம்... முரளி, வடிவேலு வேடங்களில் இவர்களா?
படத்தின் கதைக்கு ஏற்றாற்போல இவர் உடலை வருத்தி தோற்றத்தை மாற்றுவரா என கேள்வி எனக்கு இருந்தது. அவருக்கு அறிவுரை எல்லாம் செய்தேன். ஆனால் நமது அறிவுரையெல்லாம் இவர் கேட்கவா போகிறார் என நினைத்தேன். ஆனல் அமரன் படப்பிடிப்பில் பார்த்தபோது ஊதா கலர் ரிப்பன் பாடலில் பார்த்த சிவகார்த்திகேயனா இது என எண்ண வைத்துவிட்டார் என பாராட்டி பேசியிருந்தார்.