சென்னை: நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் நடிப்பு மட்டுமின்றி, தனது அறக்கட்டளை மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள், ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகிறார். இதன் மூலம் ஏராளமானோர் பயன்பெற்று வருகின்றனர்.
தற்போது அவர்களும் ராகவா லாரன்ஸ் வழியில் நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில், அவர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு செயல்பட உள்ள லாரன்ஸ், வருகிற மே ஒன்றாம் தேதியில் இருந்து ‘மாற்றம்’ என்ற அமைப்பைத் தொடங்கி செயல்படுத்த உள்ளார்.
இந்த நிலையில், ராகவா லாரன்ஸின் மாற்றம் அமைப்பில் இணைந்து தானும் நலத்திட்ட உதவிகள் செய்ய உள்ளதாக நடிகர் எஸ்ஜே சூர்யா வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எஸ்ஜே சூர்யா வெளியிட்டுள்ள வீடியோவில், “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் நடிக்கும் போது நானும், லாரன்ஸும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டோம்.
அவர் எனக்கு நண்பராக கிடைத்தது பெரும் மகிழ்ச்சி. வருகிற மே 1ஆம் தேதி முதல் லாரன்ஸ் மாற்றம் அமைப்பு தொடங்குவது மகிழ்ச்சியாக உள்ளது. நானும் மாற்றம் அமைப்பில் இணைந்து அவருடன் கைகோர்க்க உள்ளேன். அவர் சொல்லும் அனைத்து விஷயத்தையும் செய்யத் தயாராக உள்ளேன். மாற்றம் அமைப்பில் இணைந்து அவர் கை காட்டும் நபர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வமாக உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ரீ ரிலீஸ் படங்களால் சிறிய பட்ஜெட் படங்களுக்கு பாதிப்பா? கேபிள் சங்கர் பிரத்யேக பேட்டி! - Re Release Flims