ETV Bharat / state

'இத்தோடு விட்டுவிடுங்கள்'.. பொள்ளாச்சியில் நடந்தது என்ன? சபாநாயகர் வழங்கிய தீர்ப்பு..! - APPAVU ON POLLACHI ISSUE

பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக, திமுக இரு தரப்பும் வழங்கிய ஆதாரத்தில் முதல்வர் கூறியது அப்படியே இருக்கிறது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி கோப்புப்படம், சபாநயாகர் அப்பாவு
முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி கோப்புப்படம், சபாநயாகர் அப்பாவு (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2025, 1:50 PM IST

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தமிழக சட்ட ஒழுங்கு பிரச்சனை, நீட் தேர்வு ரத்து, அரசு திட்டங்கள், அண்ணா பல்கலை கழக பாலியல் வன்கொடுமை சம்பவம் என பல விவகாரங்களை எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி, அதற்கு முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை பதில் அளித்து வருகின்றனர். குறிப்பாக, அண்ணா பல்கலை விவகாரமும், அதிமுக ஆட்சியின்போது நிகழ்ந்த பொள்ளாச்சி சம்பவமும் காரசாரமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய தினமும் இவ்விரண்டு சம்பவங்கள் குறித்து முதல்வருக்கும், எதிர்க்கட்சி தலைவருக்கும் சூடான விவாதம் நடந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி, '' அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பது பிரதான கோரிக்கை. இதை வைத்து அரசியல் செய்யாமல் அவியலா செய்ய முடியும்? என காட்டமாக கேள்வி எழுப்பினார்.

12 நாட்களில் என்ன நடந்தது?

அதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், ''பொள்ளாச்சி சம்பவத்தில் புகார் அளித்தவுடன் எஃப்ஐஆர் பதிவு செய்யவில்லை. ஆனால், அண்ணா பல்கலைக் கழகத்தில் புகார் கொடுத்த உடனே எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொள்ளாச்சி வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு 12 நாட்கள் கழித்து தான் கைது நடவடிக்கை செய்யப்பட்டது.

அந்த 12 நாட்களில் என்ன நடந்தது, யாரை காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். நீங்கள் உரிய நடவடிக்கை புகார் அளித்தும் எடுக்கவில்லை. நீங்கள் கூறியதை நிருபித்துவிட்டால் நான் தண்டனை ஏற்கிறேன். நான் கூறியதை நிரூபித்துவிட்டால் என்ன தண்டனை தந்தாலும் ஏற்பீர்களா? என்றார். மேலும், பொள்ளாச்சி சம்பவத்தில் எடுக்கப்பட்ட தாமதமான நடவடிக்கை குறித்து ஆதாரத்தை வழங்கப்போவதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'சட்டசபையில் அம்மாவிற்கு நடந்தது தான் மலிவான அரசியல்' - சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி..!

அதன்படி, இன்றைய கூட்டத்தொடரின் போது சபாநாயகர் அப்பாவு-விடம் பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான ஆவணங்களை அதிமுக, திமுக சார்பில் வழங்கினர்.

சபாநாயகர் தீர்ப்பு

இதுகுறித்து சபாநாயகர் அவையில் கூறுகையில், '' பொள்ளாச்சி விவகாரத்தில் இரு தரப்பும் என்னிடம் ஆதாரங்களை வழங்கினர். இதில் முதல்வர் கூறியது அப்படியே இருக்கிறது. 12 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது. ஆனால், 24 ஆம் தேதி தான் எஃப்ஐஆர் போடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் 16 ஆம் தேதி தான் தனக்கு நேர்ந்ததை வீட்டில் சொல்கிறார். 16 ஆம் தேதி வரை என்ன நடந்தது என நமக்கு தெரியாது. இதையடுத்து 19 ஆம் தேதி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். இருந்தபோதும் 24 ஆம் தேதிதான் அந்த பெண்ணிடம் எழுதி வாங்கி எஃப்ஐஆர் போடப்பட்டுள்ளது என்றார்.

அப்போது, அதிமுகவினர் அவையில் கூச்சலிட, அவை முன்னவர் துரைமுருகன், தீர்ப்பு வரும் வரை காத்திருங்கள் என்றார். தொடர்ந்து பேசிய அப்பாவு, இருதரப்பும் என்னிடம் வந்து பேசி ஆவணங்களை கொடுத்து, இத்துடன் இந்த விவகாரத்தை விட்டுவிடுங்கள் என்றனர், அதனால் இவை முடித்து வைக்கப்பட்டது'' என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.