தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

90ஸ் கனவுக் கன்னியுடன் இணைந்த சசிகுமார்.. அக்டோபரில் படப்பிடிப்பு துவக்கம்! - Sasikumar simran Combo - SASIKUMAR SIMRAN COMBO

Sasikumar - Simran new movie: அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிக்கும் படத்தில் நடிகை சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சிம்ரன், சசிகுமார் புகைப்படம்
சிம்ரன், சசிகுமார் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 28, 2024, 6:34 PM IST

சென்னை: நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இன்று நடிகர் சசிகுமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந் இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு 'புரொடக்ஷன் நம்பர் 5' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்கிறார். பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல்களை எழுத, ஆடை வடிவமைப்பு பணிகளை நவா ராஜ்குமார் கையாள்கிறார்.

ஃபேமிலி பொழுதுபோக்கு படமாகத் தயாராகும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நசரேத் பசலியான், மகேஷ் ராஜ் பசலியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

இதையும் படிங்க: டிடிஎஃப் வாசன், பூனம் பஜ்வா, குரேஷி... பிக்பாஸ் 8இல் விறுவிறுப்பை கூட்டப் போகும் போட்டியாளர்கள் யார்? - Bigg boss season 8 tamil

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்றும், அடுத்த ஆண்டு கோடை மாத விடுமுறையில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 'தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை சிம்ரன் இப்படத்தின் மூலம் முதல் முறையாக சசிகுமார் உடன் இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details