தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

“அவர்களுடன் வெளியில் செல்வது பிடிக்காது”... சமந்தா பற்றி அவரது தந்தை கூறியது என்ன?

Samantha father joseph prabhu: நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு, பிரபலங்களுடன் வெளியில் செல்வது பிடிக்காது என சமூக வலைதளத்தில் சமந்தா ரசிகர்கள் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

நடிகை சமந்தா
நடிகை சமந்தா (Credits - IANS)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 30, 2024, 4:11 PM IST

ஹைதராபாத்: நடிகை சமந்தாவுடன் ஏன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை என்ற கேள்விக்கு அவரது தந்தை கடந்த வருடம் பதிலளித்துள்ளார். சென்னை, பல்லாவரம் பகுதியை சேர்ந்த சமந்தாவின் தந்தை பெயர் ஜோசப் மற்றும் தாய் பெயர் நின்னெட். சமந்தாவிற்கு ஜோனதன் மற்றும் டேவிட் என இரண்டு சகோதரர்கள் உள்ளனர். சமந்தா தனது ஆரம்ப் காலத்தில் பல்வேறு பணிகளில் இருந்து சிரமங்களை சந்தித்து தற்போது பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.

அவர் இந்தளவிற்கு தனது வாழ்க்கையில் முன்னேற தனது குடும்பமும் ஒரு முக்கிய காரணம் என பல்வேறு இடங்களில் கூறியுள்ளார். அதே நேரத்தில் தனக்கும் தனக்கும் தந்தைக்கும் இடையே உள்ள உறவில் விரிசல் இருந்ததாகவும், அவர் நான் சிறு குழந்தையாக இருந்த போது தனது திறமையை குறைத்து மதிப்பிட்டதாகவும் தனியார் யூடியூப் சேனலில் சமந்தா பேசியுள்ளார். இந்நிலையில் நேற்று சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு உயிரிழந்தார். சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “until we meet again dad" என பதிவிட்டிருந்தார்.

தந்தை மரணம் குறித்து சமந்தா பதிவு (Credits - Samantha Instagram Account)

கடந்த 2023இல் சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபுவிடம் பேஸ்புக்கில் ரசிகர் ஒருவர், நீங்கள் ஏன் சமந்தாவுடன் எந்த நிகழ்ச்சியிலும் தோன்றுவதில்லை என கேள்வி எழுப்பினார். அதற்கு ஜோசப் பிரபு, “எனக்கு பிரபலங்களுடன் வெளியில் செல்வது பிடிக்காது” என பதிலளித்தார். ஒரு பிரபல நடிகையின் தந்தையாக இருந்தாலும், அவர் தனிப்பட்ட வாழ்க்கையை விரும்புகிறார் என்பது தெரிய வந்தது.

சமந்தாவிற்கு நாக சைதன்யாவுடன் கடந்த 2021இல் விவாகரத்து ஆனது. அப்போது அவரது தந்தை வெளியிட்ட பதிவில், “நீண்ட காலத்திற்கு முன்பு, ஒரு கதை இருந்தது. அந்த கதை தற்போது முடிந்துவிட்டது. இனி புதிய கதையில், புதிய அத்தியாயத்தை தொடங்க வேண்டும்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 'ஆவேஷம்' படத்தில் அஜித் நடித்தால் எப்படி?... விக்னேஷ் சிவன் கூறிய சுவாரஸ்ய தகவல்!

சமந்தா, நாக சைதன்யா இருவருக்கும் கடந்த 2017இல் திருமணம் நடைபெற்றது. பின்னர் 2021ஆம் ஆண்டு விவாகரத்து ஆனது. இதனைத்தொடர்ந்து நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். பின்னர் குணமடைந்து தற்போது தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில், நாக சைதன்யா, நடிகை சோபிதா ஆகியோருக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details