சென்னை: இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா நடித்துள்ள எமக்குத் தொழில் Romance படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (ஜூலை 27) சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, கே.ராஜன், டி.சிவா, எழில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, ”டெலிவரியை போல ஒவ்வொரு படமும் வெளிவருவது ரொம்ப கஷ்டம். ஒரு படத்தை தயாரிப்பது உண்மையில் கஷ்டம் தான். ஆனால், அதை திறம்படச் செய்தால் அந்த கஷ்டம் இருக்காது. ட்ரெய்லர் பார்க்கும் போது நன்றாக இருந்தது.
என் படமும் ரிலீஸ் ஆகும் போது ரொம்ப பாராட்டினாங்க. அதுக்கு முன்னாடி அவ்வளவு பேசுனாங்க. சினிமாவில் எதுவும் நடக்கும். அசோக் செல்வனும் ரொம்ப நாகரிகமான, பண்பான மனிதர் தான். ஆயிரம் கஷ்டங்கள் இருந்தாலும் படத்தின் ரிலீஸுக்கு வர வேண்டும் என்றார்.
மேலும், படத்தின் வெற்றிக்கு ஹீரோ, ஹீரோயினுக்கு 80 சதவிகிதம் லாபம். ஆனால் தயாரிப்பாளர், இயக்குநர் நிலைமை அதே மாதிரி தான் இருக்கும். 5 முதல் 10 சதவீதம் லாபம் பெறும் தயாரிப்பாளர் புரமோஷனுக்கு ஒர்க் பண்ணும் போது 90 சதவீதம் வரை லாபம் பெறும் நடிகர்கள் ஏன் அதை செய்வதில்லை?
இன்றைக்கு சிறிய படங்களுக்கு யாரும் கடன் கொடுக்க தயாராக இல்லை. தயாரிப்பாளர் சங்கம் ஒன்றிணைந்து சரியான வழிமுறைகளைக் கொண்டு வந்தால் தேவையில்லாத பிரச்னை வராமல் இருக்கும். இதை பின்பற்றினால் 60 முதல் 80 சதவீதம் தமிழ் சினிமா மாறுபடும். வருமானம் வரும்.