தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ஆர்ஜே விஜய் கதாநாயகனாக களமிறங்கும் ‘Wife’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! - RJ Vijay Wife movie - RJ VIJAY WIFE MOVIE

WIFE RJ Vijay movie: ஆர்ஜே விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஒயிஃப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 24, 2024, 7:56 PM IST

சென்னை: ரேடியோ ஜாக்கியாக இருந்து, அதன்பிறகு சினிமாவில் நகைச்சுவை, நண்பர் வேடங்களில் நடித்து பிரபலமானவர் ஆர்ஜே விஜய். தற்போது இவர் கதாநாயகனாக ஒரு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் எஸ்.அம்பேத் குமார் வழங்க, இயக்குநர் ஹேமநாதன் இயக்கியுள்ளார். இதில் மிர்ச்சி விஜய் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார். இவர் முன்னதாக டாணாக்காரன் படத்தில் நடித்திருந்தார்.

WIFE’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வை தற்போது வெளியாகியுள்ளது. மேலும், இப்படம் பற்றி இயக்குநர் ஹேமநாதன் கூறுகையில், “கணவன் - மனைவிக்கு இடையிலான நவீன உறவை மையமாகக் கொண்டது இந்தப் படம். அதனாலேயே, இந்த தலைப்பை நாங்கள் தேர்வு செய்தோம். சதுரங்க விளையாட்டில் ஒரு ராணிக்கு எப்படி அசைக்க முடியாத ஒரு சக்தி இருக்கிறதோ, அதுபோலவே, ஒவ்வொரு வீட்டிலும் மனைவி ஒரு குடும்பத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.

திருமணத்திற்குப் பிறகு மலரும் அன்பை எமோஷ்னலாக கதையில் எடுத்து வருவதே என் நோக்கம். 'WIFE’ என்ற தலைப்பை இதற்கு முன் எந்த திரைப்படத்திற்கும் பயன்படுத்தப்படவில்லை என்ற விஷயம் தெரிய வந்தபோது ஆச்சரியமாக இருந்தது. அப்படி பயன்படுத்ததாது, எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக கருதுகிறேன். அனைத்து வயதினரும் இந்தப் படத்துடன் கனெக்ட் செய்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.

மேலும் இப்படத்தில் மைத்ரேயன், ரெடின் கிங்ஸ்லி, கல்யாணி நடராஜன், விஜய் பாபு, லல்லு, கதிர் மற்றும் பலர் நடித்துள்ளனர். கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்கிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார் மற்றும் சிவசங்கர் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். இப்படத்தின் முதல் பார்வை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதையும் படிங்க:ரசிகர்களுக்கு ராமராஜன் திடீர் அழைப்பு! - Ramarajan Saamaniyan Movie

ABOUT THE AUTHOR

...view details