தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

மனசிலாயோ சாரே... வேட்டையன் முதல் சிங்கிள் அப்டேட் வெளியீடு! - vettaiyan first single release - VETTAIYAN FIRST SINGLE RELEASE

Vettaiyan first single release: டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' படத்தில் முதல் சிங்கிள் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாகிறது.

வேட்டையன் போஸ்டர்
வேட்டையன் போஸ்டர் (Credits - @LycaProductions X account)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 7, 2024, 12:00 PM IST

சென்னை: டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ராணா டக்குபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் 'வேட்டையன்'. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள 'வேட்டையன்' படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறைக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இப்படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டிருந்த போது நடிகைகள் மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோர் தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். மேலும் சில நாடகளுக்கு முன் ரஜினிகாந்த் வேட்டையன் படத்திற்கு டப்பிங் செய்யும் வீடியோவை படக்குழு வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து வேட்டையன் படத்தின் முதல் சிங்கிள் எப்போது என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அது குறித்து இன்று படக்குழு அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. முதல் சிங்கிள் ‘மனசிலாயோ’ வரும் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாகிறது. இந்த பாடல் மால்டா என்ற ஃபோக் இசை வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் போலீசாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிகர் ஃபகத் ஃபாசில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னதாக அனிருத் இசையில் வெளியான ஜெயிலர் பாடல்களை ரசிகர்கள் இன்றளவும் ரிபீட் மோடில் கேட்டு வருகின்றனர். அதனால் வேட்டையன் பட பாடல்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: 'குணா' படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை ரத்து! - சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு! - guna movie

ABOUT THE AUTHOR

...view details