தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சென்சார் செய்யப்பட்ட ’வேட்டையன்’... நாளை வெளியாகும் டிரெய்லர்! - vettaiyan censored with UA - VETTAIYAN CENSORED WITH UA

vettaiyan censored with UA: டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியகவுள்ள 'வேட்டையன்' திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

சென்சார் செய்யப்பட்ட வேட்டையன் திரைப்படம்
சென்சார் செய்யப்பட்ட வேட்டையன் திரைப்படம் (Credits - @LycaProductions X account)

By ETV Bharat Entertainment Team

Published : Oct 1, 2024, 12:07 PM IST

சென்னை: லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் 'வேட்டையன்'. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், அபிராமி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறைக்கு தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. வேட்டையன் படத்தின் பாடல்கள் மனசிலாயோ, hunter varaar ஆகிய பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வேட்டையன் படத்தின் டிரெய்லர் நாளை அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் வேட்டையன் படத்தில் ரஜினிக்கு உரித்தான மாஸ் கமர்ஷியல் காட்சிகள் அளவிற்கு கதைக்கு முக்கியத்துவம் உள்ளதாக இருக்கும் என படத்தின் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வேட்டையன் திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு யூ/ஏ (U/A) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'Hunter varaar'...'வேட்டையன்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு! - vettaiyan trailer date

வேட்டையன் படத்தை வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. முன்னதாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் மெகா ஹிட்டான ஜெயிலர் படத்திற்கும் யூ/ஏ (U/A) வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details