தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

2025ஆம் ஆண்டு பிரேமலு-2 ரிலீஸ்! படக்குழு அறிவிப்பு! - Premalu 2 - PREMALU 2

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து வசூலை வாரிக் குவித்த பிரேமலு படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 20, 2024, 5:34 PM IST

ஐதராபாத் : மலையாளத்தில் தண்ணீர் மத்தான் தினங்கள், சூப்பர் சரண்யா படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கிரிஷ் ஏ.டி. இவரது இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பிரமேலு. நஸ்லன் கே.கஃபூர், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்து உள்ள இப்படத்துக்கு விஷ்ணு விஜய் இசையமைத்து உள்ளார்.

மேத்யூ தாமஸ், ஷ்யாம் புஸ்கரன் சிறப்புத் தோற்றத்தில் நடித்து உள்ளனர். பஹத் பாசில், ஷ்யாம் புஸ்கரன், திலேஷ் போத்தன் ஆகிய மூவரும் இணைந்து படத்தை தயாரித்து உள்ளனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது.

ஏறத்தாழ 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், உலக அளவில் 136 கோடி ரூபாய் வரை வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் கடந்த மார்ச் 15 ஆம் தேதி பிரேமலு படம் ரிலீஸ் ஆனது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தமிழில் வெளியிட்டது. மேலும், தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் இந்த படம் ரிலீசாகி உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான பாவனா ஸ்டூடியோஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளது. மேலும் இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீக்வெல் முறையில் இப்படத்தை எடுக்க படக்குழு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க :"அமேதியை போல் வயநாட்டிலும் காங்கிரஸ் இளவரசர் தோற்பார்" - பிரதமர் மோடி! - Lok Sabha Election 2024

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details