தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

பிரதீப் ரங்கநாதனுடன் குத்தாட்டம் போடும் கௌதம் மேனன்; வரவேற்பை பெறும் டிராகன் பட சிங்கிள்! - DRAGON MOVIE FIRST SINGLE

Dragon movie first single: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் படத்தின் முதல் சிங்கிள் Rise of dragon பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

டிராகன் பட சிங்கிள் ரிலீஸ்
டிராகன் பட சிங்கிள் ரிலீஸ் (Credits - @Ags_production X Account)

By ETV Bharat Entertainment Team

Published : Jan 3, 2025, 3:16 PM IST

சென்னை: பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'டிராகன்' படத்தின் முதல் சிங்கிள் The rise of dragon பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கௌதம் மேனன், மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘டிராகன்(Dragon)’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார்.

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ’கோமாளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து ’லவ் டுடே’ என்ற திரைப்படத்தை தானே இயக்கி, நடித்தார். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான ’லவ் டுடே’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இளைஞர்களுக்கு பிடித்தமான கதாநாயகனாக மாறிய பிரதீப் ரங்கநாதன் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK) என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்து வருகிறார். அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான 'ஓ மை கடவுளே' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அஸ்வத் மாரிமுத்து அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து டிராகன் படத்தை இயக்கி வருகிறார். கல்லூரி நண்பர்களான அஸ்வத் மாரிமுத்து, மற்றும் பிரதீப் ரங்கநாதன் இருவரும் ஒரே படத்தில் இணைந்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: லுங்கியுடன் வந்து ’சங்கீத கலாநிதி’ விருது பெற்றார் டி.எம்.கிருஷ்ணா! - TM KRISHNA

இந்நிலையில் லியோன் ஜேம்ஸ் இசையில் டிராகன் படத்தின் முதல் பாடல் ‘the rise of dragon’ வெளியாகியுள்ளது. இப்பாடலில் பிரதீப் ரங்கநாதனுடன் இயக்குநர் கௌதம் மேனன் நடனமாடியுள்ளார். இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். rise of dragon பாடல் இணையத்தில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வரவேற்பை பெற்று வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details