தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

அழகு கொஞ்சும் உயிர், உலகு... குழந்தைகள் தினத்தை கொண்டாடிய நயன்தாரா! - NAYANTHARA

Nayanthara childrens day celebrations: நடிகை நயன்தாரா தனது குழந்தைகளுடன் குழந்தைகள் தின கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

குழந்தைகள் தினத்தை கொண்டாடிய நயன்தாரா
குழந்தைகள் தினத்தை கொண்டாடிய நயன்தாரா (Credits - nayanthara Instagram Account)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 16, 2024, 12:15 PM IST

சென்னை: நடிகை நயன்தாரா குழந்தைகள் தின கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். பிரபல நடிகை நயன்தாரா லட்சக்கணக்கான ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இவர் கடந்த 2015இல் வெளியான 'நானும் ரௌடி தான்' படத்தின் மூலம் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்தார். இருவரும் கடந்த 2022ஆம் ஆண்டு பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடிக்கு உயிர், உலகு என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். தற்போது நயன்தாரா டெஸ்ட், மண்ணாங்கட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதனைத்தொடர்ந்து மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் 9skin உள்ளிட்ட பல நிறுவனங்களை நடத்தி வருகிறார். இதனிடையே நயன்தாரா சமீப காலமாக சமூக வலைதளங்களில் பயங்கர ஆக்டீவாக இருந்து வருகிறார். தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் பண்டிகைகள் மற்றும் சிறப்பு நாட்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினத்தன்று தனது குழந்தைகளுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: கலவையான விமர்சனங்கள் எதிரொலி: 'கங்குவா' இரண்டாவது நாள் வசூல் பெரும் வீழ்ச்சி!

நயன்தாரா பச்சை நிற புடவையில் ஜொலிக்கும் நிலையில், அவரது கணவர் விக்னேஷ் சிவன், குழந்தைகள் உயிர், உலகு ஆகியோர் வெள்ளை பட்டு, வேஷ்டி சட்டையில் பளிச்சென்று அழகாக காட்சியளிக்கின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. வரும் நவம்பர் 18ஆம் தேதி நடிகை நயன்தாரா தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில், அவரது வாழ்க்கை குறித்த ஆவணப்படம் 'Nayanthara Beyond the fairy tale' நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details