தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

“ஆர்.எம்.வீரப்பன் தமிழுக்கு ஆற்றிய தொண்டு உலகம் இருக்கும் வரை மறக்க முடியாதது” - இளையராஜா இரங்கல்! - ILAYARAJA ABOUT RM VEERAPPAN - ILAYARAJA ABOUT RM VEERAPPAN

ILAYARAJA ABOUT RM VEERAPPAN: கம்பன் புகழையும், தமிழின் உயர்வையும் நாட்டுக்கு எடுத்துக்காட்ட கருத்தரங்கங்கள் நடத்தி அவற்றை வெகுகாலம் பரப்பியவர் ஆர்.எம்.வீரப்பன் என இளையராஜா கூறியுள்ளார்.

ஆர்.எம்.வீரப்பன் தமிழுக்கு ஆற்றிய தொண்டு உலகம் இருக்கும் வரை மறக்க முடியாதது
ஆர்.எம்.வீரப்பன் தமிழுக்கு ஆற்றிய தொண்டு உலகம் இருக்கும் வரை மறக்க முடியாதது

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 9, 2024, 10:37 PM IST

ஆர்.எம்.வீரப்பன் தமிழுக்கு ஆற்றிய தொண்டு உலகம் இருக்கும் வரை மறக்க முடியாதது

சென்னை: முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் (98) இன்று மதியம் உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், ரஜினிகாந்த் உள்ளிட்ட சினிமாப் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் இளையராஜா ஆர்.எம்.வீரப்பன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அவரது வீடியோவில், "எனது அன்பிற்கும், மரியாதைக்கும், போற்றுதலுக்கும் உரிய ஆர்.எம்.வீரப்பன் காலமானார் என்ற செய்தியை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

எனது ஆழ்ந்த அனுதாபங்களை அவரது குடும்பத்தாருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். அவரைப் பற்றி தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது. அவர் எம்ஜிஆரிடம் உதவியாளராகப் பணியாற்றிய காலங்கள், எம்ஜிஆருக்கும் சரி, திரை உலகிற்கும் சரி, ஆர்.எம்.வீரப்பனுக்கும் சரி மிகப்பெரிய பொற்காலம் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவரை வைத்து வெற்றிப் படங்களைத் தயாரித்து திரையுலகில் தனிப்பெரும் பெயர் பெற்றவர்.

அதுமட்டுமல்லாமல் இலக்கியத் துறையிலும், கம்பன் கழகம் என்ற பெயரில் கம்பன் புகழையும், தமிழின் உயர்வையும் நாட்டிற்கு எடுத்துக்காட்ட கருத்தரங்கங்கள் நடத்தி, அறிஞர் பெருமக்களை வரவழைத்து அவர்களை உரையாற்ற வைத்து தமிழையும், கம்பன் புகழையும் வெகுகாலம் பரப்பியவர் என்பதும் மிகவும் முக்கியமான விஷயமாகும். அவருடைய இந்த தொண்டு தமிழ் உலகம், தமிழ் உள்ள வரைக்கும் மறக்க முடியாதது. அவரது இறப்பு நாட்டிற்கு பேரிழப்பாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதையும் படிங்க:ஆர்.எம்.வீரப்பன் மறைவு; முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி! - RM Veerappan Passed Away

ABOUT THE AUTHOR

...view details