சென்னை: சூர்யா நடித்துள்ள ’ரெட்ரோ’ (Retro) திரைப்படம் வரும் மே 1ஆம் தேதி வெளியாகிறது. கார்த்திக் சுப்பராஜ் - சூர்யா என எதிர்பாராத கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் அறிவிப்பு போஸ்டரில் இருந்தே எதிர்பார்ப்பு எகிற தொடங்கி விட்டது. இப்படத்தில் சூர்யாவுடன் ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கார்த்திக் சுப்பராஜின் ஆஸ்தான இசையமைப்பாளரான சந்தோஷ் நாரயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் ’Love laughter war’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. அதிலிருந்தே இது என்ன மாதிரியான கதைக்களமாக இருக்கும் என பலரும் யோசித்து வருகிறார்கள்.
இந்த படத்தின் தலைப்பான ’ரெட்ரோ’ சமீபத்தில் டீசர் விடியோ மூலம் அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டதை அறிவிக்கும் விதமாக ’த ஃபர்ஸ்ட் ஷாட்’ என்ற தலைப்பில் ஒரு வீடியோ கடந்த ஆண்டு ஜுன் மாதம் வெளியிடப்பட்டது. ஒரு நிமிடத்திற்கு நீளும் இந்த வீடியோ சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்டிருந்தது. இந்த வீடியோ வெளியானபோதே பரவலான வரவேற்பை பெற்றது.
Santhosh Narayanan: The Speedster!
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) February 10, 2025
Busy with Kalki 2898 AD? No problem! SaNa still made time for Retro because, well, it’s Suriya + Karthik Subbaraj! He got the file at 3 PM, cooked up a killer retro theme in record time, and delivered it by 5 PM. Talk about a musical beast!… pic.twitter.com/CzbITIDC06
இந்நிலையில் இந்த ஷாட் எடுக்கப்பட்ட விதத்தை காமிக்ஸ் வடிவில் வெளியிட்டுள்ளது ரெட்ரோ படத் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட். மேக்கிங் வீடியோ வெளியிடுவதுதான் வழக்கம். ஆனால் வித்தியாசமாக காமிக்ஸ் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர் ரெட்ரோ படக்குழுவினர்.
மேலும் அந்த ’த ஃபர்ஸ்ட் ஷாட்’ வீடியோ எத்தகைய சவால்களுக்கிடையில் எடுக்கப்பட்டதையும் தெரவித்துள்ளனர். அதன்படி அந்தமானில்தான் ரேட்ரோ முதல் நாள் படப்பிடிப்பு மேற்கொள்ளப்பட்டது. முதல் நாளில் முதல் ஷாட்டை எடுத்து அதனை உடனடியாக இணையத்தில் வெளியிடுவதுதான் படக்குழுவின் திட்டமாக இருந்துள்ளது.
ஆனால் அந்தமானின் பருவநிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை. மழை தூறிக்கொண்டிருந்த சமயத்திலேயே இந்த சிங்கிள் ஷாட் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் சந்தோஷ் நாரயணன் 'கல்கி’ திரைப்பட வேலைகளுக்கு மத்தியில் இரண்டே மணி நேரத்தில் இந்த வீடியோவிற்கான இசையாக ரெட்ரோ தீம் இசையை உருவாக்கியுள்ளார்.
எல்லாம் முடிந்து வீடியோ தயாரனாலும் அந்தமானில் இணைய வசதி மோசமாக இருந்ததால் இரவு 8 மணிக்கே இந்த வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டது என அந்த காமிக்ஸ் வழி தெரிவித்துள்ளனர்.மேலும் படத்ஹின் மேக்கிங் பற்றிய கதைகள் காமிக்ஸாக வெளிவரும் எனவும் தெரிவித்துள்ளது படக்குழு. இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான், ஊட்டி, கொச்சி என பல்வேறு பகுதிகளில் நடைபெற்று முடிந்தது.
இதையும் படிங்க: ஹீரோக்களாகும் ’பரிதாபங்கள்’ கோபி, சுதாகர்... புதிய படத்தின் டைட்டில் ரிலீஸ் அப்டேட்
படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடைக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் கோடை விடுமுறை வெளியீடாக மே 1ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் படத்திற்கான புரோமோஷனாக இப்படி வித்தியாசமான வழிகளில் படக்குழு இறங்கியுள்ளது.