சென்னை :சென்னை, ஐஐடியின் XTIC எனும் experiential Technology Innovation center சார்பில், விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் குறித்த இரண்டு நாட்கள் கருத்தரங்கு மற்றும் கண்டுபிடிப்பு கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில் பல்வேறு நாடுகளைச் சார்ந்த விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில் நுட்பங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. சிறந்த விரிச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்திற்கான விருதுகளும் வழங்கப்பட்டன.
இதில், கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த லீ மஸ்க் என்ற மெய் நிகர் (விர்ச்சுவல்) திரைப்படத்தை இயக்கியதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு புதுமைக்கான விருதை சென்னை ஐஐடி வழங்கியது. மேலும் XTIC என்ற experiential Technology innovation centre மையத்தின் செய்தி வெளியீட்டு மலரை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டார்.
பின்னர் மேடையில் பேசிய அவர், "உலகத்திற்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட படத்திற்காக நான் பிறந்த ஊரில் விருது வாங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மெய் நிகர் தொழில் நுட்பத்தால் 37 நிமிட படம் பார்த்தவர்கள் 10 நிமிடம் படமா எனக் கேட்டனர். இந்தப் படத்தினை தயாரிக்க 5 மில்லியன் அமெரிக்க டாலர் செலவிடப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணி புரிந்துள்ளனர். புதிய தொழில்நுட்பம் என்பதால் அனைவரும் ரசித்தனர்.
இதையும் படிங்க :"பெண்களின் அழகு கூந்தலில் இல்லை" - முத்தரசனுக்கு ஈஷா கண்டனம்!