சென்னை: ராகவா லாரன்ஸ் இயக்கும் ’காஞ்சனா 4’ படத்தில் பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ராஜ்கிரண் நடித்த திரைப்படம் ’முனி’. இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது. முனி திரைப்படம் ஹாரர் காமெடி திரைப்படமாக உருவானது. அதுமட்டுமின்றி முனி படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிகமாக பேய்ப் படங்கள் வரத் தொடங்கியது. இதற்கு பிறகு முனி படத்தின் இரண்டாம் பாகம் ’காஞ்சனா’, ’காஞ்சனா 2’, ’காஞ்சனா 3’ என பல படங்களை ராகவா லாரன்ஸ் உருவாக்கினார்.
அனைத்து திரைப்படங்களும் நல்ல வசூலை பெற்றது. காஞ்சனா திரைப்படத்தில் திருநங்கையாக சரத்குமார் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. காஞ்சனா வெளியான காலகட்டத்தில் பல இயக்குநர்கள் ஹாரர் காமெடி படங்களை உருவாக்கினர். அதற்கு சிறந்த உதாரணம் சுந்தர்.சி இயக்கிய அரண்மனை படத்தை கூறலாம். அரண்மனை திரைப்படம் இதுவரை 4 பாகங்கள் உருவாகியுள்ளது.
Confirmed - #PoojaHegde plays a ghost in the movie #Kanchana4.
— Movie Tamil (@MovieTamil4) December 30, 2024
- Dir & Hero By #RaghavaLawrence
Shooting 2025 ✌🏻 pic.twitter.com/6q5X7zBnCx
ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவிற்கு ட்ரெண்ட் செட்டர் ஆக இருந்தார். இந்நிலையில் காஞ்சனா 4 திரைப்படம் உருவாகிறது. ராகவா லாரன்ஸ் இயக்கும் ’காஞ்சனா 4’ படத்தில் பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படத்தில் பூஜா ஹெக்டே பேயாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகை பூஜா ஹெக்டே ஜீவா நடித்த ’முகமுடி’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
பின்னர் கடந்த 2021இல் வெளியான விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதனைத்தொடர்ந்து அல்லு அர்ஜூன் நடித்த ’வைகுண்டபுரம்’, பிரபாஸுடன் ’ராதே ஷ்யாம்’ ஆகிய படங்களில் நடித்து பெயர் பெற்றார். இதனையடுத்து தற்போது ஹெ.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ’தளபதி 69’ படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: நடிகை மமிதா பைஜூவை அடித்தேனா?... இயக்குநர் பாலா விளக்கம்! - BALA ABOUT MAMITHA BAIJU
அதேபோல் கடைசியாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ’ரெட்ரோ’ திரைப்பட டீசரில் பூஜா ஹெக்டே நடித்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது ’காஞ்சனா 4’ படத்தில் நடிக்கவுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.