ETV Bharat / state

கொடி கம்பங்கள் அகற்றப்பட்டதை உறுதி படுத்துங்கள்! நீதிமன்றம் உத்தரவு! - POLITICAL PARTY FLAG POLE ISSUE

அரசியல் கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளதா என்பதை தலைமை செயலாளர் நீதிமன்றத்தில் உறுதிபடுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம்
கோப்புப் படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2025, 10:37 PM IST

மதுரை: ஏப்ரல் 28-ஆம் தேதிக்கு முன் அனைத்து அரசியல் கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்பட்டு உள்ளதா என்பதை தலைமை செயலாளர் நீதிமன்றத்தில் உறுதி படுத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மதுரை விளாங்குடியைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் சித்தன் தாக்கல் செய்த மனுவில், "அ.தி.மு.க-வின் 53-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு விளாங்குடி பகுதியில் உள்ள கட்சியின் பழைய கொடி கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய கொடி கம்பம் அமைக்க அனுமதி வழங்குமாறு மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்," என்று கோரிக்கை மனு தாக்கல் செய்திருந்தார்.

இதே போல மதுரை, பைபாஸ்ரோடு பேருந்து நிறுத்தம் அருகே போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடத்தில் அ.தி.மு.க கட்சி கொடிக்கம்பம் அமைக்க அனுமதிக்கக் கோரி மதுரை மாடக்குளம் பகுதியைச் சேர்ந்த பல மனுக்கள் தாக்கல் செய்யபட்டிருந்தன.

இதையும் படிங்க: ஈசிஆரில் பெண்களை துரத்தியவர்கள் காரில் திமுக கொடி இருந்தது எப்படி? காவல் துணை ஆணையரின் விளக்கம்!

இந்த மனுக்கள் நீதிபதி இளந்திரையன் முன்பாக ஏற்கனவே விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சி மற்றும் இயக்கங்கள், மத ரீதியான அனைத்து கொடிக் கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில், இந்த மனுக்கள் மீண்டும், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதி இளந்திரையன் முன் பட்டியலிடப்பட்டது. அப்போது, “கட்சி கொடி கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும். அவர்களாகவே அகற்றி கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. தேதி குறிப்படாமல் இருந்தது.

இதையும் படிங்க: தக்கார் நியமன விவகாரம்: நித்யானந்தாவின் மேல்முறையீடு மனு தள்ளுபடி!

எனவே, ஏப்ரல் 28-ஆம் தேதிக்கு முன் அனைத்து அரசியல் கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்பட்டு உள்ளதா என்பதை தமிழ்நாடு தலைமை செயலாளர் நீதிமன்றத்தில் உறுதி படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.