தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

துருவ் விக்ரம் - மாரி செல்வராஜ் காம்போ; பைசன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! - BISON Shooting - BISON SHOOTING

Bison: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் பைசன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

பைசன் பட போஸ்டர்
பைசன் பட போஸ்டர் (Credits - Mari selvaraj X page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 29, 2024, 4:54 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் சமூக நீதி பேசும் திரைப்படங்கள் மூலம் முக்கிய இயக்குநராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் ஏற்கனவே பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட சமூகநீதி பேசும் திரைப்படங்களை இயக்கி உள்ளார். இப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இவர் ’வாழை’ என்ற திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் ’பைசன் காளமாடன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள் மற்றும் அருவி மதன் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார்.

அப்ளஸ் நிறுவனமும் (Applause Entertainment), நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து பைசன் படத்தை தயாரிக்கிறது. இப்படம் கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பைசன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, பைசன் பட டைட்டில் அறிவிப்பு போஸ்டரில் "கால்நடையாய் நடந்து வாரான் காளமாடன்.. அவன் கார்மேகம் போல வாரான் காளமாடன்.." என்கிற வசனத்துடன் இயக்குநர் மாரி செல்வராஜ் போஸ்டரை வெளியிட்டிருந்தார். ஆதலால், ரசிகர்கள் மத்தியில் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முன்னதாக நடிகர் துருவ் விக்ரம், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகான் படத்தில் நடித்தார். இப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது பைசன் படமும், துருவுக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:இந்தியன் 2 பட வெளியீடில் சிக்கல்.. கமல்ஹாசனுக்கு மதுரை உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ்! - INDIAN 2 Case

ABOUT THE AUTHOR

...view details