சென்னை: லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அபிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியானது முதல் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதில் ரஜினிகாந்த் பேசிய வசனம் ‘குறி வெச்சா இரை விழணும்’ மிகவும் பிரபலமானது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை துஷாரா விஜயன் வேட்டையன் படத்திற்கு டப்பிங் செய்யும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார்.
அதேபோல் பிரபல நடிகை மஞ்சு வாரியர் தான் வேட்டையன் படத்தில் ரஜினிகாந்துக்கு மனைவியாக நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர் ஃபகத் ஃபாசில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது. இன்று ஃபகத் ஃபாசில் தனது 42வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்து வேட்டையன் படத்தின் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளது.