சென்னை: சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘கூலி’. அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தில் நடிகர் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. பொதுவாக லோகேஷ் கனகராஜின் படத்தின் அறிவிப்பு வீடியோவிற்கு விக்ரம் படம் முதல் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
அந்த ப்ரோமோ மூலம் கதையின் மையக்கருவை ரசிகர்கள் ஓரளவு தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் விக்ரம் படத்தின் ப்ரோமோ வெளியானது முதல் அப்படத்திற்கு நல்ல விளம்பரமாக அமைந்தது. அதனைத்தொடர்ந்து வெளியான லியோ படத்தின் ப்ரோமோவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது கூலி படத்தின் ப்ரோமோவில் பின்னணி இசை பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. அதில் இடம்பெற்றிருந்த டிஸ்கோ என்ற பாடல் இன்றளவும் பேசப்படுகிறது. அந்த ப்ரோமோ மூலம் இப்படம் தங்கம் கடத்தல் தொடர்பான கதை என தெரிகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் வெளியான தகவலின் படி இப்படத்தில் பிரபல கன்னட நடிகர் உபேந்திரா நடிப்பதாக கூறப்பட்டது.