ETV Bharat / entertainment

'ஆவேஷம்' படத்தில் அஜித் நடித்தால் எப்படி?... விக்னேஷ் சிவன் கூறிய சுவாரஸ்ய தகவல்! - VIGNESH SHIVAN ABOUT AJITH MOVIE

vignesh shivan about ajith movie: இயக்குநர் விக்னேஷ் சிவன் தான் நடிகர் அஜித்தை வைத்து இயக்குவதாக இருந்த திரைப்பட கதை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

விக்னேஷ் சிவன், அஜித்குமார்
விக்னேஷ் சிவன், அஜித்குமார் (Credits - ANI)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 30, 2024, 12:52 PM IST

சென்னை: பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் தான் அஜித்தை வைத்து இயக்குவதாக இருந்த திரைப்படம் குறித்து பேசியுள்ளார். பிரபல நடிகர் அஜித்குமார் கடைசியாக எச்.வினோத் இயக்கத்தில் ’துணிவு’ படத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து அஜித்குமார் 62வது படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. இந்த கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து திடிரென்று விக்னேஷ் சிவன், அஜித் திரைப்படம் கைவிடப்பட்டது. இதனை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தார். இதனால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இது ஒருபுறம் இருக்க இந்த விவகாரத்தில் பல கட்டுக் கதைகள் கோலிவுட்டில் பரவியது. அதாவது விக்னேஷ் சிவன் கதை உருவாக்க தாமதம் செய்தார் எனவும், விக்னேஷ் சிவன் கதை அஜித்திற்கு பிடிக்கவில்லை எனவும் வதந்தி பரவியது.

இதனைத்தொடர்ந்து அஜித்குமார் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் ’விடாமுயற்சி’ படத்தில் நடித்தார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், அஜித் படம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியது, “அஜித் சாருக்கு நானும் ரௌடி தான் திரைப்படம் மிகவும் பிடித்திருந்தது. நான் அதிகமாக படங்கள் பர்க்கவில்லை. ஆனால் நான் நானும் ரௌடி தான் படம் பார்த்த போது பார்த்திபன் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அதேபோல் ஒரு கதையில் எனக்கு நடிக்க விருப்பம் என அஜித் கூறினார். நான் அவருக்கு சொன்ன கதை ஃபகத் ஃபாசில் நடிப்பில் வெளியான ’ஆவேஷம்’ படம் போன்றது. ஆனால் தயாரிப்பு நிறுவனம் வேறு மாதிரியான கதையை எதிர்பார்த்தனர். இது காமெடி கதை போல் உள்ளது என கூறினர்” என்றார்.

இதையும் படிங்க: 'அமரன்' திரைப்பட ஓடிடி ரிலீஸ் தேதி?... ராஜ்கமல் ஃபிலிம்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மேலும் விக்னேஷ் சிவன் தற்போது ப்ரதீப் ரங்கநாதனை வைத்து இயக்கும் LIK திரைப்படம் முன்பு சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்ததாக கூறினார். ஆவேஷம் போன்ற படத்தில் அஜித்குமார் நடித்திருந்தால் தமிழில் வித்தியாசமான கதையுடன் மெகா ஹிட் படமாக அமைந்திருக்கும். மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி டீசர் சர்ப்ரைஸாக வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. விடாமுயற்சி திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.