ETV Bharat / entertainment

"கர்மா அசலும், வட்டியுமாக வந்து சேரும்"... நயன்தாரா பதிவால் மீண்டும் கிளம்பும் சர்ச்சை! - NAYANTHARA INSTAGRAM STATUS

Nayanthara instagram status: பிரபல நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை நயன்தாரா
நடிகை நயன்தாரா (Credits - ANI)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 30, 2024, 10:43 AM IST

சென்னை: நடிகை நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் பதிவு மீண்டும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள Nayanthara: beyond the fairy tale ஆவணப்படத்தில் தனுஷின் 'Wunderbar films' தயாரிப்பில் கடந்த 2015இல் வெளிவந்த ’நானும் ரௌடி தான்’ படத்தின் காட்சிகள் பயன்படுத்தப்பட்டது.

இதற்கு 10 கோடி இழப்பீடு கேட்டு Wunderbar films நிறுவனம் நயன்தாரா, விக்னேஷ் சிவன், மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தது. இதனைத்தொடர்ந்து நடிகை நயன்தாரா நடிகர் தனுஷை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதாவது நானும் ரௌடி தான் படத்தில் நடித்ததன் மூலம் தனக்கு அந்த படத்தின் சில காட்சிகளை பயன்படுத்த உரிமை உள்ளது எனவும், தங்களின் மேடைப் பேச்சின் மூலம் ரசிகர்களை நீங்கள் ஏமாற்றுவதாக அறிக்கை வெளியிட்டார்.

நடிகை நயன்தாரா இன்ஸ்டாகிராம் பதிவு
நடிகை நயன்தாரா இன்ஸ்டாகிராம் பதிவு (Credits - nayanthara Instagram account)

இந்த அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு பிரபல நடிகர் மீது வெளிப்படையாக பிரபல நடிகை ஒருவர் குற்றம் சுமத்தியதால் கோலிவுட்டில் பேசு பொருளானது. நடிகை நயன்தாராவிற்கு பல்வேறு மொழியை சேர்ந்த நடிகைகள் பலர் ஆதரவு அளித்தனர். இந்நிலையில் தனுஷ், நயன்தாரா அறிக்கைக்கு எந்தவித பதிலடியும் கொடுக்காமல் சட்ட ரீதியாக வழக்கு தொடர்ந்து அணுகி வருகிறார்.

இதனிடையே தனுஷ், நயன்தாரா பிரச்சனை கோலிவுட்டில் பற்றி எரிந்த நேரத்தில் இருவரும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமண நிகழ்வில் பங்கேற்றனர். இந்த நிகழ்வு அனைவரது கவனத்தையும் பெற்றது. இந்நிலையில் தற்போது நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: “Until we meet again dad”... நடிகை சமந்தாவின் தந்தை உயிரிழந்தார்

அவரது பதிவில், “கர்மா கூறுவது என்னவென்றால், பொய்களை பேசி ஒருவரது வாழ்க்கையை அழிக்க நினைத்தால், அது அசலும், வட்டியுமாக உங்களிடம் வந்து சேரும்” எனக் கூறியுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், இது நயன்தாரா தனுஷிற்காக வெளியிட்ட மறைமுக பதிவாக இருக்குமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகை நயன்தாரா தற்போது மண்ணாங்கட்டி, டெஸ்ட் ஆகிய படங்களில் நடித்துள்ள நிலையில், ராக்காயி படத்தில் நடித்து வருகிறார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.