தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

14 வருட மேஜிக்; பையா ரீ-ரிலீஸ்.. கார்த்தி, தமன்னா நெகிழ்ச்சி! - Paiyaa rerelease - PAIYAA RERELEASE

Paiyaa Rerelease: கார்த்தி, தமன்னா நடிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியான பையா படம் இன்று மீண்டும் திரையரங்குகளில் ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 11, 2024, 10:31 AM IST

சென்னை:தமிழ் சினிமாவில் தற்போது ரீ ரிலீஸ் மோகம் அதிகரித்துள்ளது. இதன்படி, வெற்றி பெற்ற படம், வெளியாகி நீண்ட நாட்கள் ஆன பிறகு வரவேற்பு பெற்ற படங்கள் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த 14 வருடங்களுக்கு முன்பு வெளியாகி இளைஞர்களை கிறங்கடித்த ‘பையா’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரீ ரீலீஸ் ஆகியுள்ளது.

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், கார்த்தி, தமன்னா நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வெளியான இந்த படம், காதல், காமெடி, சென்டிமென்ட், ஆக்சன், பாடல்கள் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. குறிப்பாக, நடிகை தமன்னாவுக்கு இந்த படம் தான் தமிழ் சினிமாவில் முதல் வெற்றிப் படமாக அமைந்தது.

இந்த நிலையில், ‘பையா’ படம் இன்று மீண்டும் ரீலீஸ் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, நடிகர் கார்த்திக்கு வாழ்த்து தெரிவித்தார், இயக்குநர் என்.லிங்குசாமி. “பையா எப்ப பாத்தாலும் அது புதுசாகத் தான் இருக்கும். இன்னொரு ஸ்பெஷாலிட்டி, படத்த எந்த பகுதியிலிருந்தும் பாக்கலாம், குழப்பமே இல்லாத திரைக்கதைன்னு என் நண்பர்கள் எப்பவுமே சொல்லுவாங்க.

படத்தில் கார் டிராவலாகட்டும், சின்ன சின்ன சுவாரசியமான காதல் காட்சிகளாகட்டும், கலர் கலரான டிரசாகட்டும், யுவனின் பாட்டுகள், மதியின் அசத்தலான ஒளிப்பதிவாகட்டும், படபிடிப்பில் என் கூடவே இருந்த வசனகர்த்தா பிருந்தா சாரதியாகட்டும், மக்கள் கொண்டாடிய தமன்னாவாகட்டும், எல்லாமே ஒரு சுகமான அனுபவம். அதன் பிறகு தியேட்டரில் ரசிகர்கள் குடும்ப குடும்பமாக கொண்டாடியதாகட்டும்”என இப்படி பல விஷயங்களை கார்த்தி சொல்ல, பையா பட அனுபவங்களை இருவரும் பகிர்ந்துகொண்டனர்.

இதேபோல் பையா குறித்து உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகை தமன்னா. இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “14 வருடங்களுக்குப் பிறகும் கூட ‘பையா’ படத்தின் மீதான அன்பு, இப்போதும் குறையாமல் பலமாக இருப்பதை பார்ப்பதே சிறப்பான உணர்வைத் தருகிறது. இந்த காலகட்டத்தில் கூட இந்த படத்திற்கு கிடைத்து வரும் பாசத்தையும், அன்பையும் பார்க்கும்போது ரொம்பவே சந்தோஷமாக உணர்கிறேன்.

என் மனம் உற்சாகத்தால் நிரம்பியுள்ளது. மீண்டும் பெரிய திரையில் ‘பையா’ படத்தின் மேஜிக்கை உங்கள் அனைவருடனும் சேர்ந்து அனுபவிப்பதற்காக என்னால் காத்திருக்க முடியாது. இயக்குநர் லிங்குசாமி சார், கார்த்தி, யுவன் சங்கர் ராஜா மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் இப்படி அற்புதமான நினைவுகளை கொடுத்ததற்காக முழு மனதுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க:ரஷ்யாவில் ஜாலியாக விளையாடும் நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ! - Actor Vijay Playing In Russia

ABOUT THE AUTHOR

...view details