ஹைதராபாத்:பிரபல தெலுங்கு நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், சிரஞ்சீவி உள்ளிட்ட பலர் சமந்தா விவாகரத்து குறித்து அமைச்சர் கொண்டா சுரேகா பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரபல நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யா இருவரும் கடந்த 2021இல் விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் தெலுங்கானா வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கொண்டா சுரேகா, சமந்தா, நாக சைதன்யா விவாகரத்து பெற்றதற்கு பிஆர்எஸ் கட்சி செயல் தலைவர் கேடிராமராவ் தான் காரணம் என கூறினார்.
இவ்வாறு பேசியதற்கு சமந்தா, நாகார்ஜுனா, அமலா அக்கினேனி ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து இன்று அமைச்சர் கொண்டா சுரேகா தனது கருத்தை திரும்ப பெறுவதாக தெரிவித்துள்ளார். அவரது பதிவில், “எனது கருத்து சமந்தா மற்றும் அவரது ரசிகர்களை காயப்படுத்தியிருந்தால், உடனடியாக திரும்ப பெற்று கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் தெலுங்கு சினிமாத் துறையில் பூதாகரமாக வெடித்துள்ளது.
அமைச்சர் கொண்டா சுரேகாவிற்கு ஜுனியர் என்டிஆர், சீரஞ்சீவி உள்ளிட்ட தெலுங்கு திரையுலகினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜூனியர் என்டிஆர் தனது சமூக வலைதள பக்கத்தில், “அமைச்சர் கொண்டா சுரேகா, ஒருவரின் சொந்த வாழ்க்கையை அரசியலில் இழுப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. உங்களை போன்ற மதிக்கத்தக்க பதிவியில் இருப்பவர்கள் கண்ணியத்தையும், மரியாதையையும் கடைபிடிக்க வேண்டும்.