சென்னை: தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகும் ‘லப்பர் பந்து’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடித்துள்ளனர். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
'லப்பர் பந்து' படத்திற்காக ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இருவரும் கிரிக்கெட் பயிற்சி எடுத்துக் கொண்டு நடித்துள்ளனர். படத்தின் இறுதிகட்ட பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், செப்டம்பர் 20ஆம் தேதி லப்பர் பந்து படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த டிரெய்லரில் விஜயகாந்த், கங்குலி, தோனி ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளது. 'கங்குலி கடலூர் பக்கம் வந்திருந்தா இன்னைக்கு தோனின்னு ஒருத்தர் இருந்தருக்கவே மாட்டாரு' என்ற வசனங்கள் சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது.