சென்னை:வேளச்சேரியிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் 'ஸ்டார் டா' என்ற திரைக் கலைஞர்களுக்கான (இந்தியாவின் பிரீமியர் டேலண்ட் மேனேஜ்மென்ட் பிளாட்பார்ம்) செயலி அறிமுக விழா நடைபெற்றது. இந்த ஸ்டார் டா என்ற செயலி, சினிமாவில் வாய்ப்பு தேடி வருவர்களுக்கென்றே பிரேத்யேகமாக உருவாக்கப்பட்ட செயலி ஆகும்.
இதன் மூலம் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், பாடலாசிரியர், இசையமைப்பாளர் போன்றவர்களைத் தேர்வு செய்து கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது. இதனைத் தொடங்கி வைப்பதற்காக நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார், இயக்குநரும், நடிகருமான அருண்ராஜா காமராஜ், நடிகை நிவேதிதா சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் மேடையில் பேசிய இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ், "நான் சிறுவயதிலிருந்தே திரைத்துறையில் உள்ளேன். நான் புதிய முகங்களுடன் அதிகம் பணியாற்றியுள்ளேன். குறிப்பாக வெற்றிமாறன், அட்லீ, ஏ.எல்.விஜய் போன்ற புது முகங்களுடன் பணியாற்றுவது எனக்கு மிகவும் பிடிக்கும். என்னுடைய 25 படங்களில், 17 படங்கள் புது முகங்கள்தான்.