ஹைதராபாத்: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு மன அழுத்தம் குறித்து பேசியுள்ளார். கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்றார். இது கோவாவில் நடைபெறும் 55வது சர்வதேச திரைப்பட விழாவாகும். இதில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்றார்.
அந்த நிகழ்வில் ஏ.ஆர்.ரகுமான் பேசுகையில், “நாம் எல்லோருக்கும் மனநல பிரச்சனைகள், மன அழுத்தங்கள் உள்ளது. நாம் அனைவரது மனதிலும் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை கதைகள், தத்துவம், பொழுதுபோக்கு போன்றவை மூலம் நிரப்ப முடியும். அது உங்களுக்கு மருந்தாக அமையும். இவை வன்முறை, பாலுறவு ஆகியவற்றை விட மேலானது.
முன்னதாக ஏ.ஆர்.ரகுமான் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகத்தில் பேசிய போது, தனக்கு சிறு வயதில் தற்கொலை எண்ணங்கள் தோன்றியதாகவும், தனது தாயார் அந்த எண்ணங்களில் இருந்து மீண்டு வர அடுத்தவர்களுக்காக வாழும் முக்கியத்துவத்தை உணர்த்தினார் என கூறினார். மேலும் ஒருவரை நாம் பார்த்து சிரிப்பது கூட அவர்களது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும்.