ETV Bharat / state

முழங்கால் அளவு கழிவு நீரில் இறந்தவர் உடலை எடுத்து செல்லும் அவலம்... - PEOPLE CARRY BODY IN SEWAGE WATER

திருப்பூரில் இறந்தவரின் உடலை தேங்கியுள்ள கழிவுநீரில் கடந்துச் சென்று அடக்கம் செய்யும் அவல நிலை உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கழிவு நீரில் இறந்தவர் உடலை எடுத்து செல்லும்  ஊர்மக்கள்
கழிவு நீரில் இறந்தவர் உடலை எடுத்து செல்லும் ஊர்மக்கள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 21, 2025, 1:34 PM IST

திருப்பூர்: திட்டமிடல் இல்லாத சாலை விரிவாக்க பணியால் மயானத்திற்கு செல்லும் பாதையில் கழிவுநீர் சூழ்ந்துள்ளது. இதனால், இறந்தவர்களின் உடலை தேங்கியுள்ள கழிவு நீரில் சுமந்துச் சென்று அடக்கம் செய்துள்ளனர். எனவே, இப்பகுதியில் முறையான சாலை வசதியை ஏற்படுத்தி தருமாறும், நீர்வழிப் பாதையில் போடப்பட்ட சாலையை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட மடத்துப்பாளையம் ஆதிதிராவிடர் காலனி குடியிருப்பில் வசித்து வருபவர் முத்தான் (வயது 85). இவர் உடல் நலக்குறைவால் நேற்று (ஜனவரி 21) திங்கட்கிழமை மதியம் உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடலை மயானத்திற்கு கொண்டு செல்வதற்காக உறவினர்கள் தயாராகினர்.

இதற்கிடையில், அவிநாசி செம்மாண்டம்பாளையம் பகுதியில் நெடுஞ்சாலை துறையினரால் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதியில் எடுக்கப்பட்ட பள்ளத்தில், அவிநாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் தேக்கமடைந்து, மடத்துப்பாளையம் ஆதிதிராவிடர் காலனி மக்களின் மயான பாதையை சூழ்ந்துள்ளது.

முழங்கால் அளவு கழிவு நீரில் இறந்தவர் உடலை எடுத்து செல்லும் அவலம் (ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில், இறந்தவரின் உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்லும் போது, ஆதிதிராவிடர் காலனி மக்கள் பயன்படுத்தி வந்த மயானத்திற்கு போகும் பாதையில் கழிவு நீர் சூழ்ந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், மாற்று வழியின்றி இறந்தவர் உடலை முழங்கால் அளவிற்கு மேல் தேங்கியுள்ள கழிவு நீரைச் கடந்துச் சென்று அடக்கம் செய்தனர்.

இதுகுறித்து இறந்தவரின் உறவினர்கள் கூறுகையில், "தற்போது பகல் நேரத்தில் நாங்கள் இப்பதையை கடந்து வந்து விட்டோம். இரவு நேரத்தில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய எப்படி இந்த கழிவு நீரில் கடப்பது? இங்கே சாலை வசதி, மின்விளக்கு வசதி எதுவுமில்லை.

இதையும் படிங்க: கொலை வழக்கில் பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை.. தேனி நீதிமன்றம் உத்தரவு!

மேலும், அவிநாசி செம்மாண்டம்பாளையம் பகுதியில், நெடுஞ்சாலை துறையினரால் சாலை விரிவாக்க பணி என்கின்ற பெயரில், நூறாண்டு காலமாக பயன்படுத்தி வந்த சாலையை தவிர்த்து, நீர்வழிப் பாதையில் புதிய சாலைகளை அமைத்து வருகின்றனர். மழைக் காலங்களில் கிராம பகுதிகளிலிருந்து பெருக்கெடுத்து வரும் மழைநீர், கர்மபாளையம் குட்டையில் இருந்து வெளியேறும் உபரிநீர் ஆகியவை அவிநாசி சங்கமாங்குளத்திற்கு செல்லும் நீர்வழிப் பாதையிலேயே தற்போது சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால், அவிநாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வரும் சாக்கடை கழிவுநீர் தேக்கமடைந்து மடத்துப்பாளையம் ஆதிதிராவிடர் காலனி மக்களின் மயான பாதை முழுவதுமாக சூழ்ந்துள்ளது. எனவே, மடத்துப்பாளையம் பகுதி மக்கள் மயானத்தை உயிர் பயமின்றி பயன்படுத்த, மின்விளக்கு வசதியும், முறையான பாதை வசதியையும் ஏற்படுத்தி தர வேண்டும்.

மேலும், நெடுஞ்சாலை துறையினர் முறையாக திட்டமிட்டு நீர்வழிப் பாதையில் போடப்பட்ட சாலையை அகற்றிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோல், திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே குதிரையாறு அணை பகுதியில், உடைந்த நிலையில் உள்ள தரை பாலம் சரி செய்யபடாததால் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல சிரமம் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.