தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

திரை பிரபலங்கள் மத்தியில் கோலாகலமாக நடைபெற்ற ஷங்கர் மகளின் திருமண விழா! - Director Shankar Daughter Marriage - DIRECTOR SHANKAR DAUGHTER MARRIAGE

Director Shankar Daughter Marriage: இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் சென்னையில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 15, 2024, 9:18 PM IST

திரை பிரபலங்கள் மத்தியில் கோலாகலமாக நடைபெற்ற ஷங்கர் மகளின் திருமண விழா

சென்னை: இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவின் இரண்டாவது திருமணம் இன்று (ஏப்ரல் 15) சென்னையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஐஸ்வர்யா, தருண் கார்த்திகேயன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

திரை பிரபலங்கள் மத்தியில் கோலாகலமாக நடைபெற்ற ஷங்கர் மகளின் திருமண விழா

தருண் கார்த்திகேயன் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகவும், பாடலாசிரியராகவும் ஒரு சில படங்களில் பணியாற்றியுள்ளார். இந்த திருமணத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்.

திரை பிரபலங்கள் மத்தியில் கோலாகலமாக நடைபெற்ற ஷங்கர் மகளின் திருமண விழா

மேலும் இந்த திருமண விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விக்ரம், விஷால், அர்ஜுன், நாசர், ஸ்ரீகாந்த், சாந்தனு பாக்யராஜ், சித்தார்த் நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், அதிதி ராவ், ப்ரியா அட்லி இயக்குநர்கள் பாரதிராஜா, மணிரத்னம், சுஹாசினி, பாக்யராஜ், P.வாசு, K.S.ரவிகுமார், ஹரி, விஷ்ணு வர்தன், அனுவர்தன், விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திரை பிரபலங்கள் மத்தியில் கோலாகலமாக நடைபெற்ற ஷங்கர் மகளின் திருமண விழா

மேலும் தயாரிப்பாளர்கள் R.B.சௌத்ரி, ஜெயந்திலால் காடா, AM ரத்னம், தில் ராஜு, ஐசரி கணேஷ், ராஜசேகர் (2D), திருப்பதி பிரசாத் இசையமைப்பாளர் ஹாரில் ஜெயராஜ், ஒளிப்பதிவாளர்கள் ரவி K சந்திரன், ரவிவர்மன், GK விஷ்ணு உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

திரை பிரபலங்கள் மத்தியில் கோலாகலமாக நடைபெற்ற ஷங்கர் மகளின் திருமண விழா

மணமக்களை வாழ்த்த வந்தவர்களை இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் அட்லி, இயக்குநர் வசந்த பாலன், நடிகர் பரத், மேலாளர் தங்கதுரை ஆகியோர் வரவேற்றனர். இயக்குநர் ஷங்கர் தற்போது கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தையும், ராம்சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தையும் இயக்கி வருகிறார். ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி கதாநாயகியாக மாவீரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

திரை பிரபலங்கள் மத்தியில் கோலாகலமாக நடைபெற்ற ஷங்கர் மகளின் திருமண விழா

இதையும் படிங்க: சல்மான் கான் வீடு முன் துப்பாக்கிச் சூடு: சிசிடிவியில் சிக்கிய முக்கிய குற்றவாளி? குற்றப்பிரிவுக்கு விசாரணை மாற்றம்! என்ன காரணம்? - Salman Khan House Gunshot

ABOUT THE AUTHOR

...view details