சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘வாழை’ திரைப்படம் இன்று (ஆக.23) வெளியாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை மாரி செல்வராஜ் தயாரித்துள்ளார்.
இளம் வயது பள்ளி மாணவன் தனது குடும்ப சூழ்நிலையால் வார இறுதி நாட்களில் வாழைத்தார் சுமக்கும் வேலைக்கு தனது தாயுடன் செல்கிறான். அவன் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை இப்படத்தின் மையக்கதை ஆகும்.
மேலும் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது வாழ்க்கையில் சிறு வயதில் நடந்த சம்பவங்களின் பின்னணியாக கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், முன்னதாகவே பார்த்த திரைப் பிரபலங்கள் மாரி செல்வராஜை பாராட்டி வருகின்றனர்.
இயக்குநர் பாலா, நடிகர் தங்கதுரை உள்ளிட்டோர் வாழை படம் பார்த்து மாரி செல்வராஜை கட்டியணைத்து அழுது தனது பாராட்டுக்களை தெரிவித்தனர். மேலும் சிலர் இப்படத்தின் கிளைமாக்ஸ் கதிகலங்க வைப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தனுஷ், கீர்த்தி சுரேஷ், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் வாழை திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு மாரி செல்வராஜுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மாரி செல்வராஜ் இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று, என் நான்காவது திரைப்படமான 'வாழை' வெளியாகிறது. வாழையில், என் வாழ்வின் உச்சபட்ச கண்ணீரையும், கதறலையும் ஒரு திரைக்கதையாக்கி அதை எளிய சினிமாவாக்கி உங்கள் முன் வைக்கிறேன். இனி உங்கள் முத்தத்திலும், அரவணைப்பிலும் கொஞ்சம் இளைப்பாறுவேன் என்று நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ரிலீசாகும் முன்பே வாழை படத்திற்கு குவியும் பாராட்டு.. கண்ணீர் விட்ட பாலா! - Mari selvaraj vaazhai