தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

குபேரா மழை கொட்டிடுச்சு.. ராஷ்மிகா மந்தனா பர்ஸ்ட் லுக் வீடியோ வெளியானது! - KUBERA RASHMIKA FIRST LOOk VIDEO - KUBERA RASHMIKA FIRST LOOK VIDEO

KUBERA: இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில், குபேரா படத்தில் நடிக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஃப்ர்ஸ்ட் லுக் வீடியோ இன்று வெளியாகி உள்ளது.

ராஷ்மிகா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
ராஷ்மிகா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் (Credits - rashmika mandana X page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 5, 2024, 4:21 PM IST

ஹைதராபாத்:இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ், நாகர்ஜுனா நடிப்பில் புதிதாக உருவாகி வரும் திரைப்படம் குபேரா. இப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் தெலுங்கு சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஃப்ர்ஸ்ட் லுக் வீடியோ வருகிற ஜூலை 5ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்த நிலையில், இன்று ஃப்ர்ஸ்ட் லுக் வீடியோவை வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில், நடிகை ராஷ்மிகா கடப்பாரை மற்றும் கோடாரியைக் கொண்டு குழி தோண்டுகிறார். அந்த குழியினுள் இருந்து ட்ராலி (Trolley) ஒன்றை எடுக்கிறார். அதில், ரூ.500 நோட்டுகள் கட்டு கட்டாக உள்ளன. அந்த ட்ராலியைக் கொண்டு போகின்ற மாதிரி வீடியோ ஒன்றை படக்குழு எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் நடிகை ராஷ்மிகா மந்தனா ஏதேனும் கும்பலுடன் கொள்ளையடித்து விட்டு பணத்தை ஒளித்து வைத்து எடுத்துச் செல்கிறாரா? அல்லது வீட்டில் இருந்து பணத்தை கொள்ளையடித்துச் செல்கிறாரா என ரசிகர்கள் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு படக்குழு கட்டுக்கட்டாக பணம் இருப்பது போன்ற வீடியோவை வெளியிட்டிருப்பது மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க :தொடங்கியது 'கூலி' படத்தின் படப்பிடிப்பு.. ரஜினிகாந்துடன் நடிக்கும் நடிகர்கள் யார்? - Coolie movie shooting started

ABOUT THE AUTHOR

...view details