தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'வணங்கான்' முதல் சிங்கிள் மனதை வருடும் மெலடி பாடல் வெளியீடு! - VANANGAAN FIRST SINGLE

'Vanangaan' first single: பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள 'வணங்கான்' திரைப்படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியாகியுள்ளது.

வணங்கான் போஸ்டர்ஸ்
வணங்கான் போஸ்டர்ஸ் (Credits - @arunvijayno1 X Account)

By ETV Bharat Entertainment Team

Published : 17 hours ago

சென்னை: ’வணங்கான்’ படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியாகியுள்ளது. வி ஹவுஸ் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் மற்றும் பி ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து, பாலா இயக்கத்தில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘வணங்கான்’. இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, பாடல்களை பாடலாசிரியர் வைரமுத்து எழுதி உள்ளார். இப்படத்தின் சண்டைப் பயிற்சியாளராக சிவா பணியாற்றியுள்ள நிலையில், படத்தொகுப்பு பணிகளை சுதர்சன் கையாண்டுள்ளார். பாலா படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் அவரது சமீபத்திய படங்கள் ரசிகர்களை கவரவில்லை. அவர் கடைசியாக இயக்கிய ’வர்மா’ திரைப்படம் எதிர்ம்றை விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் ’வணங்கான்’ படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதலில் சூர்யா நடிக்க இருந்த ’வணங்கான்’ திரைப்படம் அவர் விலகியதை தொடர்ந்து அருண் விஜய் ஒப்பந்தமானார். வணங்கான் படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், இன்று (டிச.21) படத்தின் முதல் சிங்கிள் ‘இறை நூறு’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த மெலடி பாடலை மதுபால கிருஷ்ணன் மற்றும் கார்த்திக் நேத்தா ஆகியோர் பாடியுள்ளனர்.

இதையும் படிங்க: 'டும் டும் டும்'... 2024இல் திருமண பந்தத்தில் இணைந்த திரைப் பிரபலங்கள் லிஸ்ட்! - ACTORS MARRAIGE 2024

இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. முன்னதாக இயக்குநர் பாலா திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு தமிழ் சினிமா சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் நடிகர்கள் சூர்யா, அருண் விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வரும் பொங்கல் பண்டிகைக்கு வணங்கான், விடாமுயற்சி, வா வாத்தியார் ஆகிய படங்கள் வெளியாகிறது.

ABOUT THE AUTHOR

...view details