தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நண்பர்கள் தினத்தில் மிகவும் ரசிக்கப்படும் தமிழ் திரைப்படங்கள்.. உங்கள் லிஸ்ட்டில் இதையும் சேர்த்துக்கோங்க! - Friendship day special - FRIENDSHIP DAY SPECIAL

Friendship day special: நண்பர்கள் தினத்தை முன்னிட்டு, தமிழ் சினிமாவில் நட்புறவைக் கொண்டாடும் விதமாக எடுக்கப்பட்ட திரைப்படங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்

ப்ரெண்ட்ஷிப்பை கொண்டாடும் திரைப்படங்கள்
ப்ரெண்ட்ஷிப்பை கொண்டாடும் திரைப்படங்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Entertainment Team

Published : Aug 4, 2024, 7:00 AM IST

சென்னை:தமிழ் சினிமாவில் ஆரம்பம் முதல் தாய், தந்தை, அண்ணன், தங்கை ஆகிய உறவு முறைகளைக் கொண்டு பல படங்கள் வந்துள்ளது. ஆனால், நண்பர்கள் பற்றிய கதை எந்த காலகட்டத்திலும் ரசிகர்களை ஈர்க்க தவறியது இல்லை. அந்த வகையில், தமிழ் சினிமாவில் நண்பர்களை மையமாக வைத்து வெளிவந்த சில பிளாக்பஸ்டர் படங்கள், அதில் இடம்பெற்ற பாடல்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்

தளபதி: மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்மூட்டி, அரவிந்த்சாமி உள்ளிட்டோர் நடித்து 1991ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தளபதி'. இப்படம் ரஜினிகாந்த், மம்மூட்டி திரை வாழ்வில் மைல்கல்லாக அமைந்தது. பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றி பெற்ற தளபதி படத்தில் ரஜினிகாந்த், மம்மூட்டி கதாபாத்திரங்களின் நட்பு இன்றளவும் ரசிக்கும் படியாக உள்ளது. அதேபோல், ‘காட்டுக்குயிலு’ பாடலின் வரிகள் இன்றளவும் நண்பர்கள் தின வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்களில் வலம் வருகின்றன.

கண்ணெதிரே தோன்றினாள்: ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரசாந்த், சிம்ரன், கரண் உள்ளிட்டோர் நடிப்பில் 1998இல் வெளியான படம் ‘கண்ணெதிரே தோன்றினாள்’. இந்த படத்தின் கதை பிரசாந்த், கரண் கதாபாத்திரத்தின் நட்பை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும்.

இப்படத்தில் தேவா இசையில் இடம்பெற்ற ‘ஈஸ்வரா’ பாடல் பட்டி தொட்டிஎங்கும் ஒலித்தது. அதேபோல், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் காதல் தேசம் படத்தில் இடம்பெற்ற ‘முஸ்தபா முஸ்தபா’ பாடலும் இன்றளவும் ப்ரெண்ட்ஷிப் டெம்ப்ளேட் பாடலாக இருந்து வருகிறது.

பஞ்சதந்திரம்:கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜெயராம், ரமேஷ் அரவிந்த், ஸ்ரீமன், யூகி சேது உள்ளிட்டோர் நடித்து கடந்த 2002இல் வெளியான திரைப்படம் ‘பஞ்சதந்திரம்’. கிரேஸி மோகன் வசனத்தில் காமெடி டிராமா ஜானரில் உருவானது பஞ்சதந்திரம். இப்படத்தில் கமல்ஹாசனுடன் சேர்ந்து அவரது நண்பர்கள் செய்யும் ரகளையான காமெடிகள், ரசிகர்களை ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இப்படத்தில், நடிகர் நாகேஷுடன் காரில் நண்பர்கள் பேசும் காட்சி, 5 நண்பர்கள் கான்ஃபரென்ஸ் கால் ஆகியவை கிளாசிக் காமெடி காட்சிகளாக இன்றளவும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.

சென்னை 600028: வெங்கட் பிரபு இயக்கத்தில் ஜெய், பிரேம்ஜி, சிவா, நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடித்து கடந்த 2007இல் வெளியான திரைப்படம் ‘சென்னை 600028’. தங்களது ஏரியாவில் இரு அணியாக கிரிக்கெட் விளையாடி வரும் நண்பர்கள், அவர்களுக்குள் வரும் சண்டை, நண்பர்களின் காதலினால் ஏற்படும் பிரிவு, கிரிக்கெட் போட்டியில் அரங்கேறும் காமெடி என ரசிகர்களை திரைக்கதை, படம் முழுவதும் கலகலப்பாக வைத்திருக்கும். இப்படத்தில் ‘நட்புக்குள்ளே’ பாடல் வைரலானது. அதேபோல், இப்படத்தில் இடம்பெற்ற ‘ஜல்சா பண்ணுங்கடா’ பாடல் நண்பர்கள் பார்ட்டிகளில் விருப்ப பாடலாக உள்ளது.

நண்பன்:ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்து 2012இல் வெளியான திரைப்படம் ‘நண்பன்’. இப்படம் இந்தியில் வெளியான ‘3 இடியட்ஸ்’ படத்தின் ரீமேக்காகும். தங்களுடன் கல்லூரியில் படித்த நண்பன் தங்களது வாழ்க்கையில் ஏற்படுத்திய பெரும் மாற்றத்தை காமெடியாக கூறிய படம் இது. மேலும், மாணவர்கள் தங்களுக்கு பிடித்தமான எதிர்காலத்தை அமைத்துக் கொள்வது குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் இப்படத்தில் இடம் பெற்றிருக்கும்.

என்றென்றும் புன்னகை: அகமது இயக்கத்தில் ஜீவா, வினய், சந்தானம் ஆகியோர் நடித்து கடந்த 2013இல் வெளியான திரைப்படம் ‘என்றென்றும் புன்னகை’. சிறு வயதில் இருந்து ஒன்றாக வளரும் மூன்று நண்பர்கள், பின்பு தங்களது நண்பனின் காதலால் பிரிவது மையக்கதை. படம் ஆரம்பம் முதல் முடிவு வரை ஆடியன்ஸுக்கு சிரிப்பலையை ஏற்படுத்தியது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் வரவேற்பைப் பெற்றது.

ஓ மை கடவுளே: அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன், ஷாரா உள்ளிட்டோர் நடித்து கடந்த 2020இல் வெளியான படம் ‘ஓ மை கடவுளே’. தமிழ் சினிமாவில் இரண்டு ஆண் நண்பர்கள் குறித்து பல படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆண், பெண் நட்பை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது.

திருச்சிற்றம்பலம்: மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்து கடந்த 2022இல் வெளியான படம் 'திருச்சிற்றம்பலம்'. இந்த படமும் ஆண், பெண் நட்பை மையமாகk கொண்டு உருவாக்கப்பட்டது. மேலும், அனிருத் இசையில் பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:திரையுலகில் 32 வருடங்கள்.. தனி ஆளாக ரசிகர்கள் மனதை வென்ற அஜித்குமார்.. கடந்து வந்த பாதை! - 32 years of ajithkumar

ABOUT THE AUTHOR

...view details