சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' (Vidaamuyarchi) மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' (Good Bad Ugly) ஆகிய 2 திரைப்படங்களில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைத்துள்ள விடாமுயற்சி படத்தில் த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
கடைசியாக அஜர்பைஜானில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்ததாகப் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். அதையடுத்து, நீண்ட நாட்களாக படம் குறித்து எந்தவித தகவலும் வராததால், அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர். அதன் பிறகு இப்படத்தில் இருந்து மற்ற நடிகர்களின் அறிமுக புகைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது.
அதில், அஜித்தின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இருந்தாலும் படம் குறித்த அப்டேட் வராததால், அஜித் ரசிகர்கள் செல்லும் இடமெங்கும் "கடவுளே அஜித்தே" என்ற கோஷத்தை முழக்கமிட்டு வந்தனர். குட் பேட் அக்லி படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்த நிலையில், விடாமுயற்சி படம் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
இதையும் படிங்க: ஃபெங்கல் புயல் எதிரொலி: சித்தார்த் நடித்துள்ள ‘மிஸ் யூ’ திரைப்பட ரிலீஸ் ஒத்திவைப்பு!