ஹைதராபாத்:பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் புஷ்பா 2, ஹிந்தியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கானுடன் சிகந்தர் (Sikandar) படத்திலும், விக்கி கௌஷல் நடிக்கும் சாவா (chhava) படத்திலும் நடித்து வருகிறார்.
மேலும் தனுஷ், நாகார்ஜுனா நடிக்கும் குபேரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா தனக்கு விபத்து ஏற்பட்டதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "நான் எனது சமூக வலைதள பக்கத்தை பயன்படுத்தி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது.