தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ஆவணப்படத்துக்கு நன்றி தெரிவித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கை: தனுஷ் பெயர் மிஸ்சிங்! - NAYANTARA THANKS NOTE

Nayanthara: Beyond The Fairytale ஆவணப்படத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கையில் நடிகர் தனுஷின் பெயரை தவிர்த்து தயாரிப்பாளர்கள் சுபாஷ்கரன், உதயநிதி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன், நயன்தாரா வெளியிட்ட அறிக்கை
நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன், நயன்தாரா வெளியிட்ட அறிக்கை (Credits - Nayanthara X Page, ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2024, 8:25 PM IST

சென்னை :தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர்‌ இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரின் திருமணம் கடந்த 2022ம் ஆண்டு மாமல்லபுரத்தில் வைத்து நடைபெற்றது. இந்நிலையில், நடிகை நயன்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கை, காதல், திருமணம் ஆகியவற்றை தழுவி Nayanthara: Beyond The Fairytale என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்படம்‌ கடந்த நவ 18ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி‌ தளத்தில் வெளியானது. இந்த ஆவணப்படத்தில், நயன்தாரா பேட்டியும், அவர் படப்பிடிப்பில் பங்கேற்கும் காட்சிகள், மேக்கப் போடுவது உள்ளிட்ட பல காட்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், தனது ஆவணப்படத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நமது Nayanthara: Beyond the Fairy Tale ஆவணப்படம் வெளியாகி இருக்கிறது. பல்வேறு மகிழ்வான தருணங்கள் அடங்கிய எனது திரைப் பயனத்தின், நாம் இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் மிகவும் இன்றியமையாதது.

அதனால், அந்த படங்கள் குறித்த நினைவுகளும் ஆவணப்படத்தில் இடம்பெற வேண்டும் என உங்களை அணுகியபோது, எந்தவித தயக்கமோ, தாமதமோ இல்லாமல் தடையில்லா சான்றிதழ் வழங்கிய அந்த பேரன்பை என்றென்றும் நன்றியோடு நினைவில் வைத்துக் கொள்வேன்.

இதையும் படிங்க :சர்ச்சைக்குள்ளான 3 வினாடி காட்சி 'நயன்தாரா' ஆவணப்படத்தில் இடம்பெறுமா? நெட்பிளிக்ஸ் நிறுவனம் விளக்கம்.. என்ன செய்யப் போகிறார் தனுஷ்?

மேலும், அறிக்கையில் பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரது மனைவிக்கும், தமிழ் சினிமாவில் கவிதாலாயா புரோடக்சன்ஸ், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், லைகா புரோடக்சன்ஸ், ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், வேல்ஸ் ஃப்லீம் இன்டர்நேஷனல் லிமிடெட், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உள்ளிட்டவற்றிற்கும், தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி, ராம் சரண், சிவபிரசாத் ரெட்டி மற்றும் மலையாள சினிமாவில் விந்நியன், மகா சுபைர் உள்ளிட்ட பலருக்கும் நன்றி தெரிவித்து நம் பயணம் இதேபோல் என்றென்றும் தொடரும்" என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த அறிக்கையில் 'நானும் ரெளடி தான்' படத்தின் காட்சிகளை பயன்படுத்த நடிகர் தனுஷ்(வன்டர்பார் ஃபிலிம்ஸ்) அனுமதி வழங்காததால், அவரின் பெயரை நடிகை நயன்தாரா குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details