மும்பை: பிரபல நடிகை நயன்தாரா தற்போது மூக்குத்தி அம்மன் 2, மன்னாங்கட்டி, டெஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நயன்தாரா தனது கணவரும், இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் இணைந்து 'ரௌடி பிக்சர்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். மேலும் நயன்தாரா femi9, 9skin உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “செம்பருத்தி டீ குடித்தால் உடலுக்கு நல்லது, அது சில நோய்களுக்கு மருந்தாகவும், மழைக் காலங்களில் குடிப்பதற்கு உகந்தது. மேலும் செம்பருத்தி டீயில் அதிக வைட்டமின் இருப்பதால் உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும். செம்பருத்தி டீ குடிப்பதால் சீசன் மாற்றத்தால் உடல்நல பாதிப்பு ஏற்படாது” என கூறியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து கல்லீரல் மருத்துவர் ஃபிலிப்ஸ், நயன்தாரா பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டார். அவரது பதிவில், “நடிகை சமந்தாவை விட அதிகம் பேரால் பின் தொடரப்படும் நடிகை நயன்தாரா செம்பருத்தி டீ குறித்து தவறான கருத்துக்களை பதிவிடக்கூடாது.
நயன்தாரா செம்பருத்தி டீ சுவையாக உள்ளது என்று மட்டும் கூறியிருந்தால் பிரச்னை இல்லை, ஆனால் அதற்கும் மேல் உடல் நலம் குறித்து போதுமான தெளிவு இல்லாமல் தெரியாததை பேசியுள்ளார். மேலும், செம்பருத்தி டீ சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகியவைக்கு நல்லது . காய்ச்சலில் இருந்து பாதுகாக்க உதவுகிறது என கூறியுள்ளார். அவை அனைத்தும் நிரூபிக்கப்படாதவை” என கூறியுள்ளார்.