தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

தனுஷ் விவகாரம், யூடியூப் சேனலில் பணம் சம்பாதிக்கும் ’3 குரங்குகள்’... நயன்தாரா காரசார பேட்டி! - NAYANTHARA ON DHANUSH AND YOUTUBERS

Nayanthara on dhanush and youtubers: நடிகை நயன்தாரா தனுஷ் அறிக்கை குறித்தும், பிரபல யூடியூப் சேனல் தன் மீது பரப்பும் வதந்தி குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.

நயன்தாரா புகைப்படம்
நயன்தாரா புகைப்படம் (Credits - ANI)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 12, 2024, 1:05 PM IST

சென்னை: நடிகை நயன்தாரா நடிகர் தனுஷ் உடனான சர்ச்சை, விமர்சகர்கள் ஆகியவை பற்றி பேசியுள்ளார். பிரபல நடிகை நயன்தாரா தனியார் யூடியூப் சேனலுக்கு நேர்காணலில் பல்வேறு சர்ச்சைகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். நயன்தாராவின் வாழ்க்கை குறித்த ஆவணப் படம் கடந்த மாதம் வெளியானது. அந்த ஆவணப்படம் குறித்த காப்புரிமை விவகாரத்தில் நடிகர் தனுஷை நயன்தாரா கடுமையாக விமர்சித்தார்.

இதுகுறித்து நேற்று வெளியான நேர்காணலில் நயன்தாரா பேசுகையில், “நான் தவறு செய்தால் மட்டுமே பயப்பட வேண்டும். ஒருவரை வேண்டுமென்றே விளம்பரத்திற்காக விமர்சிக்கவில்லை. நாங்கள் ஆவணப்படத்தில் 4 வரி வசனங்கள் பயன்படுத்த வேண்டும் என்று தனுஷ், தனுஷ் மேலாளர், அவரது நண்பர்கள் என அனைவரையும் தொடர்பு கொண்டோம். ஆனால் முடியவில்லை” என்றார்.

மேலும் பேசுகையில், “அந்த வரிகள் எங்கள் வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமானது. ஒரு நண்பராக தனுஷ் எங்களுக்கு அனுமதி அளிப்பார் என நம்பினேன். பின்னர் அவரது மேலாளரை தொடர்பு கொண்டு காப்புரிமை அனுமதி அளிக்காத காரணத்தை தெரிந்தி கொள்ள விரும்பினேன், அதுவும் முடியவில்லை. நாங்கள் ’நானும் ரௌடி தான்’ பட காட்சியை பயன்படுத்தவில்லை. எங்கள் போனில் எடுத்த BTS காட்சிகளை தான் பயன்படுத்தினோம். தனுஷ் மீது மரியாதை வைத்திருந்தேன், அவர் இப்படி நடந்து கொள்வார் என நினைக்கவில்லை” என்றார்.

அதேபோல் சர்ச்சைக்குரிய விமர்சகர்கள் குறித்து நயந்தாரா கிண்டலாக பேசியுள்ளார். அவர் பேசுகையில், “என்னை பற்றி வதந்திகளை பேசும் 3 நபர்கள் உள்ளனர். அவர்கள் பெரிய பிரபலங்கள் இல்லை. அவர்கள் 50 எபிசோடுகள் வெளியிட்டிருந்தால் குறைந்தது 45 எபிசோடுகளில் என்னை பற்றி பேசி இருப்பார்கள்” என்றார்.

மேலும் நயன்தாரா பேசுகையில், “என்னை பற்றியே எப்போதும் பேச காரணம் என்ன விசாரித்த போது, என்ன பற்றி பேசினால் பணம் வரும் என கூறினர். என்னை பற்றி பேசி சம்பாதிப்பதால் விட்டுவிட்டேன். அவர்கள் ஒருவரை குறித்து வதந்திகளை பேசி சம்பாதிக்கின்றனர். இந்த 3 நபர்கள் 3 குரங்குகள் போன்றவர்கள். நான் இப்போது பேசுவதால் கூட அவர்கள் பிரபலமாக வாய்ப்புள்ளது” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: "17 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்கிறோம்" - இயக்குநர் சீனு ராமசாமி மனைவியுடன் விவாகரத்து!

பின்னர் நயன்தாரா தான் பணிபுரிந்த இயக்குநர்கள் பற்றி பேசுகையில், ”நான் ஆரம்பத்திலேயே ரஜினிகாந்த் போன்ற சூப்பர்ஸ்டாருடன் பணிபுரிந்தேன். அப்போது அவர் அவ்வளவு பிரபலமான நடிகர் என எனக்கு தெரியவில்லை. மேலும் நான் வேலை செய்த படங்களில் எனது இயக்குநர்கள் என்னை நன்றாக பார்த்து கொண்டனர். அதனால் தான் பாலிவுட்டில் என்னால் எளிதாக நடிக்க முடிந்தது. ஜவான் படத்தில் ஷாருக்கான் மற்றும் நான் தம்பியாக பார்க்கும் அட்லீக்காக நடித்தேன். அப்படத்தில் நடித்த போது ஷாருக்கான் என்னை நன்றாக பார்த்து கொண்டார்” என கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details