தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

“சீனியர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்..” ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து நடிகை கஸ்தூரி கருத்து! - Actress kasthuri

Actress kasthuri: கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை கஸ்தூரி, ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் புறப்பட்டுச் சென்றார்.

நடிகை கஸ்தூரி
நடிகை கஸ்தூரி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 2, 2024, 1:17 PM IST

தஞ்சாவூர்:கும்பகோணம் மடத்துத் தெருவில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற தமிழகத்தின் முதல் விநாயகர் பிரதிஷ்டை விழாவில், நடிகை கஸ்தூரி, பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச்.ராஜா, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ஆகியோர் பங்கேற்றனர்.

நடிகை கஸ்தூரி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இதனைத் தொடர்ந்து, நடிகை கஸ்தூரி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, கேரள மாநில திரைப்படத்துறையில் பெரும் பரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள ஹேமா கமிட்டி போல, தமிழ்நாட்டிலும் நடிகைகளுக்கு கமிட்டி அமைக்க வேண்டும் என நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை ராதிகா போன்றோர் கூறியுள்ளனர் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த கஸ்தூரி, சீனியர்கள் அவர்கள் கருத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார். மீண்டும் செய்தியாளர்கள் ஹேமா கமிட்டி குறித்து கேள்வி எழுப்ப முயன்ற போது, அது தவிர்த்த வேறு கேள்விகள் உள்ளதா என கேட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி.. அமெரிக்காவில் வாழை படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின் பாராட்டு! - CM MK Stalin praised vaazhai movie

ABOUT THE AUTHOR

...view details