சென்னை:தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகர் இலியானா டி குரூஸ். கேடி என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின், விஜயுடன் நண்பன் என்ற படத்தில் நடித்து, தமிழ் சினிமாவில் பிரபலமானார். தமிழ், தெலுங்கு மட்டுமின்றி, பாலிவுட் படங்களிலும் நடித்து வந்தார். இந்த நிலையில், சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்தார். இருப்பினும், அவரது கணவர் பற்றி எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
இதனை அடுத்து, தனது கணவருடன் இருந்த புகைப்படத்தை வெளியிட்டார். அப்போது, அவரது முகம் பிளர் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதில், “என் மீது நான் அக்கறை கொள்ள மறந்த நாட்களில் கூட அவர் என் மீது அக்கறை காட்டினார். நான் சோகமாக இருக்கும் போது என் கண்ணீரைத் துடைத்து, என்னை பிடித்துக் கொண்டார். என்னை சிரிக்க வைக்க முட்டாள்தனமான காமெடிகளைச் சொல்லி சிரிக்க வைப்பார். எனக்கு என்ன தேவையோ அதை அறிந்து செயல்படுகிறார்” என்றார்.