தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"விடுதலைக்கு முன்.. விடுதலைக்கு பின்.." - விடுதலை 2 ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி பேச்சு! - VIDUTHALAI 2 AUDIO LAUNCH EVENT

வெற்றிமாறன் என்னும் யுனிவர்சிட்டியில் விடுதலை என்ற டிகிரி படித்ததற்கு பிறகு தான் என் வாழ்க்கை மாறியது. என் வாழ்க்கையே விடுதலைக்கு முன் விடுதலைக்கு பின் என்று பிரிக்கலாம் என நடிகர் சூரி பேசினார்.

விடுதலை 2 போஸ்டர்ஸ்
விடுதலை 2 போஸ்டர்ஸ் (Credits - RS Infotainment X Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2024, 10:54 PM IST

சென்னை :இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து, கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'விடுதலை பாகம் 1'. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

சூரி கதாநாயகனாக அறிமுகமாகிய இப்படம், திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, 'விடுதலை பாகம் 2' எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. அதன்படி விடுதலை பாகம் 2 வரும் டிச 20 தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர்.

இந்நிலையில் இன்று விடுதலை 2 ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் சூரி, விஜய்சேதுபதி, இசையமைப்பாளர் இளையராஜா, கென் மற்றும் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க :விடுதலை 2ம் பாகத்தில் இருந்து 'தினம் தினமும்' பாடல் வெளியானது!

நிகழ்ச்சி மேடையில், கென் கருணாஸ் பேசுகையில், "மிகவும் நல்ல மனிதர் விஜய் சேதுபதி, என் வாழ்கையில் ஊக்கமளிக்கும் விதமாக நிறைய சொல்லிக் கொடுத்தார். என் அம்மாவிற்கு பிறகு என்னை அழகாக இருக்க என்று அதிகம் சொல்லியது விஜய்சேதுபதி தான்" என பேசினார்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் சூரி, "மறந்திடுவேன்டா கொஞ்சம் அமைதியா இருங்கடா தம்பிங்களா என்று பேசத் தொடங்கினார். நீங்க கத்த கத்த என்ன விஜய் சேதுபதி கலாய்ச்சிட்டு இருக்காரு, (என்ன மாமா எல்லாம் உங்க ஆளுங்களா இறக்கிடீங்களா என்று விஜய் சேதுபதி கிண்டல் செய்கிறார்).

எந்த விழாவாக இருந்தாலும் கடந்த 49 ஆண்டுகளாக இளையராஜா தான் ஒரே நாயகன். இளையராஜா ஒரு இசை மருத்துவர். வெற்றிமாறன் என்னும் யுனிவர்சிட்டியில் விடுதலை என்ற டிகிரி படித்ததற்கு பிறகு தான் என் வாழ்க்கை மாறியது. என் வாழ்க்கையே கிமு, கிபி என்பது போல் விடுதலைக்கு முன் விடுதலைக்கு பின் என்று பிரிக்கலாம்.

கொட்டுக்காளி படம் பார்த்துவிட்டு நடிகர் கமல்ஹாசன் எனக்கு நான்கு பக்க கடிதத்தை எழுதினார். இதற்கெல்லாம் காரணம் வெற்றி மாறன் தான். மேடையில் நடிகர் சூரி பேசும்பொழுது கூட்டத்தில் ஒருவர் சூரி அண்ணா 'ஐ லவ் யூ' என்று சொன்னதும் 'சேம் டு யூ' என்று ரிப்ளை கொடுத்ததால் சிரிப்பலை ஏற்பட்டது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details