தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"அது நான் இல்லை".. 'மழை பிடிக்காத மனிதன்' சர்ச்சை குறித்து விஜய் ஆண்டனி கூறியது என்ன? - vijay antony - VIJAY ANTONY

Mazhai pidikkadha manithan: மழை பிடிக்காத மனிதன் படத்திலிருந்து ஒரு நிமிட காட்சி நீக்கப்பட்டதை தொடர்ந்து, அதுதொடர்பாக நடிகர் விஜய் ஆண்டனி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மழை பிடிக்காத மனிதன் படம் குறித்து விஜய் ஆண்டனி அறிக்கை
மழை பிடிக்காத மனிதன் படம் குறித்து விஜய் ஆண்டனி அறிக்கை (Credits - @FvInfiniti, ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Entertainment Team

Published : Aug 5, 2024, 3:58 PM IST

Updated : Aug 5, 2024, 6:00 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்து கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. இப்படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த விஜய் மில்டன் தனக்கு தெரியாமல் படத்தின் ஆரம்பத்தில் ஒரு நிமிட காட்சி சேர்க்கப்பட்டுள்ளதாக புகார் அளித்தார்.

மேலும் அந்த காட்சிகளால் படத்தில் கதையின் சஸ்பென்ஸ் உடைந்ததாகவும், படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வருவதாகவும் தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான இன்ஃபினிட்டி வென்சர்ஸ் நிறுவனம் படத்திலிருந்து அந்த ஒரு நிமிட காட்சியை நீக்கியது.

பின்னர் விஜய் மில்டன், "மழை பிடிக்காத மனிதன் படத்திலிருந்து தனது அனுமதி இல்லாமல் சேர்க்கப்பட்ட ஒரு நிமிட காட்சி நீக்கப்பட்டதாகவும், இதற்கு முக்கிய காரணமாக இருந்த நடிகர் சரத்குமாருக்கு நன்றி எனக்கூறி தனது சமூக வலைதளத்தில் மேலும் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகன் விஜய் ஆண்டனி இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், "மழை பிடிக்காத மனிதன் படத்தின் துவக்கத்தில் வரும் இரண்டு நிமிடக்காட்சியை, தனது ஒப்புதல் இல்லாமல் யாரோ இணைத்து உள்ளதாக, என் நண்பர், படத்தின் இயக்குநர் விஜய் மில்டன் வருத்தம் தெரிவித்திருந்தார். அது நான் இல்லை, இது சலீம் 2 இல்லை" என கூறியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து விஜய் ஆண்டனி வெளியிட்ட மேலும் ஒரு அறிக்கையில், "மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தின் துவக்கத்தில் வரும் ஒர் அறிமுக காட்சி குறித்து தயாரிப்பாளர்களும், இயக்குநரும் கலந்து பேசி அதை இன்று முதல் திரையரங்குகளில் நீக்கி விடுவதென முடிவு எடுத்துவிட்டனர். இந்த பிரச்சனை முடிந்துவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: நடிகர் விஜய்யுடன் ஜோடி சேருகிறாரா பிரேமலு புகழ் மமிதா பைஜூ? - Mamitha baiju

Last Updated : Aug 5, 2024, 6:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details