தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

தவெக மாநாட்டிற்கு சென்னையிலிருந்து சைக்கிளில் செல்லும் ’பிகில்’ பட நடிகர்! - TVK MAANAADU

Actor Soundararaja in TVK maanaadu: விக்கிரவாண்டி சாலையில் நடைபெறும் தவெக கட்சியின் முதல் மாநாட்டிற்கு செல்வதற்காக நடிகர் சௌந்தரராஜா சென்னையில் இருந்து தனது சைக்கிள் பயணத்தை தொடங்கியுள்ளார்.

தவெக மாநாட்டிற்கு சென்னையிலிருந்து சைக்கிளில் செல்லும் நடிகர் சௌந்தரராஜா
தவெக மாநாட்டிற்கு சென்னையிலிருந்து சைக்கிளில் செல்லும் நடிகர் சௌந்தரராஜா (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Entertainment Team

Published : Oct 26, 2024, 5:11 PM IST

சென்னை: விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெறும் தவெக கட்சியின் முதல் மாநாட்டிற்கு செல்வதற்காக நடிகர் சௌந்தரராஜா சென்னையில் இருந்து தனது சைக்கிள் பயணத்தை தொடங்கியுள்ளார். நடிகர் விஜய்யின் தவெக கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் நாளை நடைபெறுகிறது. தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த மாநாட்டிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தவெக கட்சியை சேர்ந்த தொண்டர்களும் நடிகர் விஜயின் ஆதரவாளர்களும் வருகை தர உள்ளனர்.

அந்த வகையில் சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் சௌந்தரராஜா. இவர் விஜய்யுடன் தெறி, பிகில் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் பூஜை, பத்து தல ஆகிய படங்களில் நடித்துள்ளார். நடிகர் சௌந்தரராஜா நாளை தவெக மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

தவெக மாநாட்டிற்கு சென்னையிலிருந்து சைக்கிளில் செல்லும் நடிகர் சௌந்தரராஜா (Credits - ETV Bharat Tamil Nadu)

இதற்காக சென்னை சாலை கிராமத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து சைக்கிள் மூலம் தனது பயணத்தை அவர் தொடங்கியுள்ளார். சாலிகிராமம் முதல் மாநாடு நடைபெறும் விக்கிரவாண்டி வி.சாலை வரை வழிநெடுக அவர் சைக்கிளில் பயணம் செய்யப் போவதாக தெரிவித்துள்ளார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் சைக்கிளில் பயணம் செய்து தவெக மாநாடு நடைபெறும் இடத்தை அடைய உள்ளனர்.

இதையும் படிங்க: சினிமா நிகழ்ச்சி மேடையில் பிரபல நடிகரை ஆவேசமாக தாக்கிய பெண் - வினோத காரணம் என்ன தெரியுமா?

கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி விஜய் தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்திருந்தார். அப்போது மீனாட்சி அம்மன் கோயிலில் நடிகர் விஜய்யின் கட்சி கொடியை வைத்து நடிகர் சௌந்தரராஜா சிறப்பு பூஜை செய்திருந்தார். பின்னர் அந்த கொடியை நடிகர் விஜய்யின் முதல் மாநாட்டிற்கு கொண்டு சேர்ப்பேன் எனவும் தெரிவித்திருந்தார். தற்போது அந்த கொடியை எடுத்துக் கொண்டு சௌந்தரராஜா தனது சைக்கிள் பயணத்தை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details