தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நடிகை அதிதி ராவை கரம் பிடித்த சித்தார்த்.. ஹைதராபாத்தில் நடந்த திருமணம்! - Actor Siddharth married Aditi Rao - ACTOR SIDDHARTH MARRIED ADITI RAO

நடிகர் சித்தார்த்துக்கும், நடிகை அதிதி ராவுக்கும் தெலுங்கானாவில் இந்து முறைப்படி திருமணம் நடந்து முடிந்துள்ளது.

நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ்
நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் (credit - IANS)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 16, 2024, 2:45 PM IST

ஹைதராபாத்: நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதாரி இருவரும் திருமணம் செய்துகொண்டதாக புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

சித்தார்த்தும், அதிதி ராவும் கடந்த 2021 ஆம் ஆண்டு 'மஹா சமுத்திரம்' படத்தில் இணைந்து நடித்தபோது காதலிக்க தொடங்கினர். இவர்களது காதல் திருமணம் வரை செல்லுமா என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்ததாக சோசியல் மீடியாவில் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இன்று இருவரும் தெலுங்கானாவில் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

இதையும் படிங்க:"என்ன என்ன புரியல".. கூலி ஸ்பாட்டில் ஓணம் நடனமாடிய ரஜினிகாந்த்!

அதுகுறித்த புகைப்படங்களை இருவரும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். அந்த பதிவில், "நீ என் சூரியன், என் சந்திரன் மற்றும் நீதான் எனது எல்லா நட்சத்திரங்கள்'' என்று காதல் ரசம் பொங்க, சித்தார்த் அதிதியின் மீதான அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணமாகும். சித்தார்த் மேக்னா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு பின்னர் பிரிந்தார். அதிதி ராவ் நடிகர் சத்யதீப் மிஸ்ராவை திருமணம் செய்து பின்னர் அவரை பிரிந்துவிட்டார்.

இவர்களது திருமணம் தெலுங்கானாவில், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலில் நடந்துள்ளது. சித்தார்த் - அதிதியின் திருமண புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details