தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"நான் சங்கி கிடையாது" - ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஆர்.ஜே.பாலாஜி! - SORGAVASAL TRAILER

எந்த கட்சி ஐடி விங்காக இருந்தாலும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் அரசியல் பாருங்கள். வாராவாரம் வெளியாகும் படத்தை அழிக்க எதுக்கு உங்கள் எனர்ஜியை வேஸ்ட் பண்றீங்க? என்று நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

சொர்க்கவாசல் போஸ்டர், ஆர்.ஜே.பாலாஜி, சான்யா
சொர்க்கவாசல் போஸ்டர், ஆர்.ஜே.பாலாஜி, சான்யா (Credits - SwipeRightStudio X Page, R J Balaji X Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2024, 4:01 PM IST

Updated : Nov 23, 2024, 6:30 PM IST

சென்னை: ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள ’சொர்க்கவாசல்’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, செல்வராகவன், நட்டி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘சொர்க்கவாசல்’.

இத்திரைப்படம் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிரூத் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பேசிய நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கூறியதாவது, "நான் இந்த படத்தை இன்னும் பார்க்கவில்லை. டீம் மீது உள்ள நம்பிக்கை சரியாக செய்துவிடுவார்கள் என்று. என்னிடம் இருந்து இயக்குநர் நடிப்பு வாங்கியுள்ளார். டீசர் பார்த்துவிட்டு எந்த ஹீரோவும் எனக்கு போன் செய்து வாழ்த்தவில்லை. இயக்குநரை தொடர்பு கொண்டு வாழ்த்தினர். எதுவும் இல்லை என்றாலும் கன்டென்ட் நன்றாக இருந்தால் படம் வெற்றி பெறும்.

ஒரு படம் வந்தால் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். எல்லோருடைய செல்போனையும் நாம் புடுங்க முடியாது. அந்த கன்ட்ரோல் நம்மிடம் இல்லை. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவது இல்ல. இந்த படம் நன்றாக இருந்தால் எல்லோருக்கும் பிடிக்கும்.

இதையும் படிங்க :ஆக்‌ஷன் அவதாரத்தில் ஆர்.ஜே.பாலாஜி; ’சொர்க்கவாசல்’ படத்தின் மிரட்டலான டிரெய்லர் வெளியீடு!

அதை யாரும் பிளான் பண்ணி எதுவும் செய்ய முடியாது. ரொம்ப பயமா இருக்கிறது. தேசிய கொடி இருந்தது. எடுத்து குத்திட்டு போஸ் பண்ண தப்பா சொல்லிடுவாங்களோ முத்திரை குத்திடுவாங்களோ. என் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மேல் உள்ள கோபத்தில் என்னை திட்டுகிறார்கள்.

என்னை பாவாடை என்று சொல்லி திட்டுறாங்க. இல்லை நான் வேஷ்டி. எனக்கு பாவாடை என்றால் என்னவென்று புரியவில்லை. நான் சங்கியும் இல்ல. எந்த கட்சி ஐடி விங்காக இருந்தாலும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் அரசியல் பாருங்கள்.

வாராவாரம் வெளியாகும் படத்தை அழிக்க எதுக்கு உங்கள் எனர்ஜியை வேஸ்ட் பண்றீங்க. படம் நல்லா இல்லை என்றால் சொல்லுங்கள். திட்டம் போட்டு அடிக்காதீங்க பயமாக உள்ளது. ஒரு நல்ல படம் எடுத்து உள்ளோம். அனைவரது ஒத்துழைப்பும் வேண்டும்" என்று பேசினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

Last Updated : Nov 23, 2024, 6:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details